"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Proverb Collection

பழமொழி தொகுப்பு (Proverb Collection) என்னும் இந்த பதிவில் அற்புதமான பல பழமொழிகளை நீங்கள் அறிந்துகொள்ளலாம். இவைகள் ஜனிக்கும் போது காகிதத்தில் வடிக்கப்படவில்லை என்றாலும் காலம் காலமாக நம் ஒவ்வொருவர் எண்ணங்களிலும் நேர்த்தியாகவே தொடுக்கப்பட்டு வருவது ஆச்சரியமே!.

பேச்சு வழக்கிலேயே வளர்க்கப்பட்டு வந்த இவைகளில் சில கருத்தாழம் உள்ளதாகவும் இன்னும்சில சிறந்த சொல்லாடலை கொண்டதாகவும் இருப்பதுண்டு. இந்த இரு சுவைகளையும் கொண்டுள்ள மதுவை இவ்வலைப்பூவில் பட்டாம்பூச்சிகளாக பறந்துவந்து அருந்திச்செல்லுங்கள்.

  •  குமரிக்கு ஒரு பிள்ளை கோடிக்கு ஒரு வெள்ளை.
  • சித்திரத்து கொக்கே … கொஞ்சம் ரத்தினத்தை கக்கே.
  • ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
  • இளமையில் சூதாடிகளாக இருப்பவர்கள், முதுமையில் பிச்சைக்காரர்களாக இருப்பார்கள்.
  • இழந்துபோன பொருளை இறைவனுக்கு அர்ப்பணி.
  • குல்லாவுக்கு பிறந்தவன் மகுடத்திற்கு ஆசைப்படலாமோ?
  • நட்டுவன் பிள்ளைக்கு கொட்டி காட்ட வேண்டுமா?
  • ஓநாய்கள் வாழும் காட்டில் கழுகுகளுக்கு பட்டினி என்பதே இல்லை.
  • மழையில் நனைய பயந்து கிணற்றில் குதித்ததாம் தவளை.
  • நமன் அறியா உயிரும் நாரை அறியா குளமும் உண்டோ?
  • நாய்களின் குரைப்புகளுக்கெல்லாம் சிங்கம் திரும்பிப்பார்ப்பதில்லை.
  • வாத்தியார் வீட்டு பிள்ளை மக்கு, வைத்தியர் வீட்டு பிள்ளை சீக்கு.
  • கைக்கு எட்டியதூரம் கைலாசம். வாய்க்கு எட்டிய தூரம் வைகுந்தம்.
  • பொருத்தமில்லாத ஜோடிகள் செருப்பாககூட இருக்க முடியாது.
  • வாதத்திற்கு மருந்துண்டு பிடிவாதத்திற்கு மருந்தில்லை.
  • வாதம் ஊதி அறி, வேதம் ஓதி அறி.
  • காரணமே தெரியாம பிள்ளையை பெத்து, அதுக்கு கண்டாமிருகம்னு பெயரும் வைத்தானாம்.
  • இரும்பை கரையான் அரிக்குமென்றால் பருந்தை கட்டெறும்பு தூக்கி செல்லாதா?
  • அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  • பலமரம் கண்ட தச்சன் ஒருமரமும் வெட்டான்.
  • ஜென்மத்தில் வந்த புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது.
  • உன்னை நனைய வைத்த கடவுளே உன்னை உலரவும் வைக்கிறார்.
  • முத்தால் நத்தை பெருமைப்படும், மூடர் எத்தாலும் பெருமைப்படார்.
  • நையாண்டி பேச்சு நல்ல நன்பர்களை இழக்க செய்துவிடும்.
  • கோட்டனுடைய முட்டை சோனா வீட்டு அம்மியையும் உடைக்கும்.
  • துழாவிப் காய்ச்சாதது கஞ்சியுமல்ல, வினாவிக் கட்டாதது கல்யாணமுமல்ல.
  • வயது பதினாறானால் பேயும்கூட உனக்கு பேரழகியாகவே தெரியும்.
  • முன்பு ஆம்லெட் ஆகாமல் தப்பித்த முட்டைகள்தான் இப்போது தந்தூரி சிக்கன் ஆகின்றன.
  • எறும்புகளுக்கு பனித்துளியே பெருமழைதான்.
  • ஜலமண்டலி கடித்தால் பரமண்டலம்தான்.
  • அணில் கொம்பில் ஏறுதுன்னு சொல்லி ஆமை கிணற்றில் இறங்கிச்சாம்.
  • சேற்றிலுள்ள முள்ளும், வேட்டை நாயின் பல்லும், மூடனுடைய சொல்லும் அதிகமாகவே குத்தும்.
  • தேரையின் வாலைப்போலவே இங்கு சுத்தம் என்பது சூனியம் ஆனது.
  • பாம்புக்கு தலையை காட்டு, அப்படியே கொஞ்சம் மீனுக்கும் வாலை காட்டு.
  • கொண்டையை கலைக்க ஒரு பேனும். குடும்பத்தை குலைக்க ஒரு பெண்ணும் போதும்.
  • ஊமை ஊரை கெடுக்கும் பெருச்சாளி பேரை கெடுக்கும்.
  • சாமிக்கு இணங்கிய பொன்னும் மாமிக்கு இணங்கிய பெண்ணும் என்றுமே அருமைதான்.
  • அஞ்சனக்காரன் முதுகில் வஞ்சனைக்காரன் ஏறினானாம்.
  • உப்பிருந்த பாண்டமும், தப்பிருந்த நெஞ்சமும் தப்பாமல் தட்டுண்டு உடையும்.
  • எறும்புகடி தாங்காதவன் கரும்பு காட்டுக்கு போனானாம்.
  • ஓணானோட ஓட்டம் வேலி வரைக்கும்தான்.
  • நனைந்த கிழவி அடுப்படிக்கு வந்தால் விறகுக்குத்தான் சேதம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!