"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Experienced Proverbs

வாழ்க்கையின் ஊடாக தாங்கள் கண்டறிந்த அனுபவங்களையே பழமொழிகளாக சொல்லி சென்றுள்ளனர் நம் முன்னோர்கள்.

தாம் கண்ட அனுபவங்களை பாமரனுக்கும் புரியும்வண்ணம் சுருங்க சொல்லி விளங்கவைப்பதே பழமொழியினுடைய சிறப்பம்சமாகும்.

சிக்கலான நுண்ணறிவுகளை சுருக்கமாக வெளிப்படுத்தும் திறன் இப்பழமொழிகளுக்கு உண்டு.

இதனையே சான்றோர்கள் வகுத்த நீதிநூல்கள்..

சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்

நவின் றோர்க்கு இனிமை நன்மொழி புணர்தல்

என குறிப்பிடுகின்றன.

இந்த அனுபவ மொழியான பழமொழியானது “மூதுரை” மற்றும் “முதுமொழி” என்ற பெயரிலும் அழைக்கப்பட்டுவருகின்றது.

இந்த பதிவில் நமது புரிதலை தொடர்ந்து புணரமைக்கும் மூதுரையான நம் முன்னோர்களின் அனுபவம் வாய்ந்த பழமொழிகள் (Experienced Proverbs) சிலவற்றைப்பற்றி பார்ப்போம்…

  • களர் உழுது கடலை விதை.
  • களர்கெட பிரண்டை இடு.
  • நாலாறு கூடினால் பாலாறு.
  • அடி நொச்சி, நுனி ஆமணக்கா?
  • குணத்தை மாற்றக் குருவில்லை.
  • தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
  • சொல் வல்லவனை வெல்லல் அரிது.
  • அவலை முக்கி தின்னு, எள்ளை நக்கி தின்னு.
  • ஊணினால் உறவு, பூணினால் அழகு. (உணவினை பகிர்ந்தால் உறவு பலப்படும். அன்பை பகிர்ந்தால் அந்த உறவு அழகாகும்).
  • ஊதி அறிந்தவன் வாதி, உப்பு அறிந்தவன் யோகி.
  • ஆற்றுப்பெருக்கும் அரச வாழ்வும் அரை நாழிகைதான்.
  • அண்டைவீட்டு பார்ப்பான் சண்டை மூட்டி தீர்ப்பான்.
  • அத்துமீறி போனான் முடிவில் பித்துக்குளி ஆனான்.
  • இடக்கனுக்கு வழி எங்கே?… கிடக்கிறவன் தலைமேலே…
  • இளமையில்தான் அடக்கம் வேண்டும், முதுமையில் தானே அடங்கிவிடும்.
  • அந்தணர் மனையில் சந்தணம் மணக்கும்.
  • உற்றதை சொன்னால் அற்றது பொருந்தும்.
  • இரும்பே பறக்கும்போது துரும்புமட்டும் துயில்கொள்ளுமா?
  • அத்தான் செத்தால் மயிராச்சு.. அவர் கம்பளி மெத்தை நமக்காச்சு.
  • அம்மா குதிர்போல, அய்யா கதிர்போல.
  • அக்கா கெட்ட கேட்டுக்கு முக்காடு ஒரு கேடா?
  • இறைத்த கிணறே ஊறும். இறையா கிணறோ நாறும்.
  • எள்ளு செடியை பிடுங்க ஏலேலோ பாட்டு கேக்குதாம்.
  • ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே…
  • காதுக்கு கடுக்கன் காளைக்கு அழகு.
  • இரப்பான் சோற்றுக்கு வெண்சோறு பஞ்சமா?
  • பகடிக்கு பணம் பத்து! பரந்தாமனுக்கோ ஒருகாசு.
  • சோற்றுக்கில்லா சுப்பன் சொன்னதெல்லாம் கேட்பான்.
  • ஊரோட உடன் ஓடு, தேரோட தெருவோடு.
  • அரைக்காசுக்கு போன மானம், ஆயிரம்காசு கொடுத்தாலும் திரும்ப வராது.
  • பல வைத்தியர்களின் மருத்துவம் மரணத்தையே பரிசளிக்கும்.
  • அங்கும் இருப்பான் இங்கும் இருப்பான் ஆக்கின சோற்றில் பங்கும் கேட்பான்.
  • அஞ்சுபணம் கொடுத்தும் கஞ்சி தண்ணிதான் குடிச்சானாம்.
  • அடி அதிரசம், குத்து கொழுக்கட்டை… (அட்றா சக்க… அட்றா சக்க).
  • வெள்ளத்தோடு வந்ததெல்லாம் வடியும்போது சென்றுவிடும்.
  • அரண்மனை வாயிற்படிதான் அதிகமாக வழுக்கும்.
  • அடிக்கிறவன் பின்னாலே போனாலும் நடிக்கிறவன் பின்னாலே போகாதே.
  • குல்லாவுக்காகப் பிறந்தவன் மகுடத்திற்கு ஆசைப்படலாமா?
  • சாகாத விதி உள்ளவனுக்கே மருத்துவம் பலிக்கும்.
  • தென்னைமரத்து நிழலும் சரி, சின்னவீட்டு உறவும் சரி.
  • கட்டக் கரிய இல்லாமற் போனாலும் பேர் மட்டும் பொன்னம்மாள்.
  • கடலைத் தாண்ட ஆசையுண்டு, ஆனால் கால்வாயைத் தாண்டத்தான் கால் இல்லை.
  • மாரி பொய்த்தால் கடல் திடலாகும், மாரி பெய்தால் திடலும் கடலாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!