"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Golden Sayings – பொன்மொழிகள்

அனுபவ ரீதியாக பெற்ற அறிவைக்கொண்டு மக்களுக்கு நீதியையும், நேர்மையையும், நன்னடத்தையையும் நயம்படக்கூறி நல்வழிப்படுத்தியதால் காலத்தை கடந்து கருத்தை வென்று வீறுநடைபோட்டு நிற்கிறது இந்த Golden Sayings – பொன்மொழிகள்.

வாருங்கள் இந்த பதிவில் உங்கள் வாழ்க்கையை மாற்றியமைக்கும் பழமொழிகள் மற்றும் பொன்மொழிகள் சிலவற்றை பார்க்கலாம்…

மணமும் குணமும்

  • ஊரை எழுப்ப வேண்டுமென்றால் முதலில் பூசாரியை எழுப்பு.
  • பாலில் இருக்கும் மணம், கூழில் இருக்கும் குணம்.
  • கக்கின பிள்ளை தக்கென பிழைக்கும்.
  • காலையில் கூவியது சேவல்… மாலையிலோ அது பருந்தின் வாயில்.
  • அச்சத்தினால் சாகிறவனுக்கு முச்சந்தியிலும் இடமில்லை.
  • கொஞ்சம் தெரிந்தவன் அதையே திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டிருப்பான்.
  • ஈயத்தை பார்த்து இளித்ததாம் பித்தளை.
  • கோழிமுட்டைக்கு தலையில்லை.. கோவில் ஆண்டிக்கு உறவில்லை.
  • விளைவது பயிராக இருக்கட்டும்… களைவது மயிராக இருக்கட்டும்…
  • அம்மிக்கல்லையே தூக்கும் காற்று குழவிக்கல்லை மட்டும் விட்டுவைக்குமா? 
  • நகம் நனையாமல் நண்டு பிடித்தானாம். முகம் நனையாமல் முத்து குளித்தானாம்.
  • நடக்க மாட்டாதவன் சித்தப்பா வீட்டில் பெண் எடுத்தானாம்.
  • ஆதாயம் இல்லாமல் ஐயர் ஆற்றை கட்டி அழுவாரா?
  • துணையாகப் போனாலும் பிணையாகப் போகாதே.
  • செத்துக்கிடக்கும் சிங்கத்தைவிட சீவனுள்ள சுண்டெலி மேல்.
  • பின்னே என்பதும், பேசாமல் இருப்பதும், இல்லை என்பதற்கே அடையாளம்.
  • வெண்கல குகையில் வைத்து வியாழம் முப்பதும் ஊதினால் மற்ற நாள் வெள்ளியாமே.
  • அட்டை செத்தால் குட்டைக்கா நட்டம்?
  • நல்லவாயன் சம்பாதித்ததை நாறவாயன் தின்னுகிட்டு போனானாம்.
  • தலைவலியும் திருகுவலியும் தனக்குவந்தால்தான் தெரியும்.

தலைப்பிள்ளை – கடைப்பிள்ளை

  • தந்தைக்கு தலைப்பிள்ளை, தாய்க்கு கடைப்பிள்ளை.
  • பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது.
  • போன அன்றைக்கு போய் புதன் அன்றைக்கு வா.
  • மதி புதன் மயிர்களை.
  • கணுக்கால் பெருத்தால் கணவனுக்கு ஆகாது.
  • கெட்டாலும் செட்டி செட்டிதான், கிழிந்தாலும் பட்டு பட்டுதான்.
  • தடவிப்பிடிக்க மயிரில்லை பெயர்மட்டும் முடிசூடும் பெருமாள்.
  • ஆந்தையும் தன் மகவை இராஜாளி என்றே எண்ணுகிறது. 
  • சாஸ்திரத்தை விளக்குமாறு கேட்டால் முடிவில் விளக்குபவனுக்கு விளக்குமாறுதான் பரிசாக கிடைக்கும்.
  • வெள்ளிக்கிழமை கொள்ளிக்கு ஆகாது.
  • வாதியும், பிரதி வாதியும் ஒரே படகில் பயணம் செய்தால் சாட்சிகள் நீந்திதான் கரையேறவேண்டி இருக்கும்.
  • எங்கேயோ போகிற மாரியாத்தா… என் மேலேயும் கொஞ்சம் வந்து ஏறு ஆத்தா.
  • கோவணத்தில் கொஞ்சம் காசிருந்தா… கோழி கூவலுக்கும் பாட்டுவரும்.
  • மொண்டு குடிக்க தண்ணி இல்லையாம் ஆனால் நண்டு பிடிக்க நாண்டுக்கிட்டு நின்னானாம்.
  • விரும்பி உண்டால் கரும்பாய் இனிக்கும்.
  • போன ஜீரத்தை புளி இட்டு அழைத்ததுபோல.
  • பாவக்காய் பச்சடி பளபளத்ததாம் அத பாத்துப்புட்டு வெங்காய பச்சடி வெலவெலத்ததாம்.
  • பல் இல்லாதவனுக்கு பக்கோடா கேக்குதாம்.
  • வெறும் கரண்டி வாயை புண்ணாக்கும்.
  • கடன் பழசாகி விட்டால் அது நீ கொடுத்த பரிசு என்று ஆகும்.

சத்திரமும் கோத்திரமும்

  • உடும்பு பிடி தெரியாமல் உடும்பு பிடிக்க போனானாம்.
  • கெட்டிக்கார சேவல் முட்டைக்குள்ளிருக்கும்போதே கூவும்.
  • சாத்திரம் பார்த்து பெண்ணை எடு, கோத்திரம் பார்த்து பெண்ணை கொடு.
  • தங்கின வியாழன் தன்னோடு மூணுபேரை கூட்டி போகும் .
  • வேதம் பொய்த்தாலும் வியாழன் பொய்க்காது.
  • ஆகாத வேளையில் பிள்ளை பிறந்தால் அதற்கு அண்டை வீட்டுக்காரன் என்ன செய்வான்?
  • நல்லது செய்து நடுவழியில் போனால்… பொல்லாதது அத்தனையும் புறவழியே போகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!