"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Guiding Candles – மெழுகுவர்த்திகள்

“இருட்டில் வழிகாட்டும் மெழுகுவர்த்திகளே பழமொழிகள்” என்பது “போஸ்னியா” தேசத்தில் உலவும் நீதியுரைகளில் ஒன்று.

பழமொழிகளானது இருட்டில் வழிகாட்டும் விளக்கினைப்போலவும், செல்லும் பாதையை ஒளிரச்செய்யும் மெழுகுவர்த்தி போலவும் செயல்படுகின்றன.

இந்த பதிவில் நமது வாழ்விற்கு வழிகாட்டுதலை வழங்கும் புதுமையான மற்றும் பயனுள்ள பழமொழிகளை பார்ப்போம்.

தங்கமும் பொன்னும்

  • ஊரார் பண்டம் உமிபோல, தன் பண்டம் தங்கம்போல.
  • எத்தனை வித்தை கற்றாலும் செத்தவனை எழுப்ப முடியுமா?
  • கழுதைக்கு உபதேசம் காதிலே சொன்னாலும் அது “காளு காளு” ன்னுதான் கத்தும்.
  • காயாகக் காய்த்து பூவாகப் பூத்ததாம்.
  • கெடுகின்ற குடி நற்சொல் கேளாது.
  • கெட்ட ஊருக்கு எட்டு வார்த்தை.
  • சட்டியில் வார்த்தால் தண்ணீர், அதையே சங்கிலே வார்த்தால் தீர்த்தம்.
  • சிறுக்கி கால்பணம்.. ஆனால் சிறுக்கி கொண்டை மூன்று பணம்.
  • சினந்தாலும் சீர் அழியப் பேசாதே.
  • சும்மா இருந்த உடம்பிலே சுண்ணாம்பு தடவி புண்ணாக்குவானேன்?
  • தங்கமும் பொன்னும் தரையிலே கிடக்கு, ஒருகாசு ஊறுகாய் உறியிலே இருக்கு.
  • பட்டு அறி, கெட்டு அறி, பத்தும் இட்டு அறி.
  • புலி அடிக்கும்முன் கிலி அடிக்கும்.
  • பெண்ணைக்கட்டி பையன் பேயானான், பிள்ளை பெற்று சிறுக்கி நாயானாள்.
  • பெற்றால் பிள்ளைநாயகம். நட்டால் தில்லைநாயகம்.
  • பெரியார் உண்மை பேதலிக்காது. சிறியார் உண்மை பூதலிக்காது.
  • பேச கற்ற நாய் வேட்டைக்கு உதவாது.
  • பேச்சைக்கொடுத்து ஏச்சை வாங்காதே.
  • பொல்லாத மனம் புத்தி கேளாது.
  • போகபோகத்தான் தெரியும் பொய்யும், மெய்யும்.

வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.

  • மண்டையில் எழுதி மயிரால் மறைத்தானாம்.
  • மேட்டில் ஏறினால் முத்தாச்சி, பள்ளத்தில் இறங்கினால் அத்தாச்சி.
  • வலிய உறவாடி வாசலிலே வந்தாலும் பொய்யாக உறவாடி போய்வா என்கின்றான்.
  • வீண் இழவாம் வெங்காயத் தாளாம். பிடுங்க பிடுங்க பேரிழவாச்சாம்.
  • வேக நேரம் இருந்தாலும் சாக நேரம் இல்லையப்பா.
  • விண்ணேறு தப்பினாலும் கண்ணேறு தப்பாது.
  • வஞ்சகம் நெஞ்சை பிளக்கும்.
  • காணி ஆசை கோடி கேடு.
  • வணங்கின முள் பிழைக்கும்.
  • வேண்டுமென்று நூற்றால் வெண்ணெய்போல் நூற்கலாம்.
  • இரக்க போனாலும் சிறக்கப் போ.
  • அகல இருந்தால் பகையும் உறவு.
  • வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
  • சருகைக் கண்டு தணல் அஞ்சுமா.
  • வல்லவன் பம்பரம் மணலிலும் ஆடும்.
  • இளமையில் சூதாடி, முதுமையில் தெருக்கோடி.
  • அட்ட தரித்திரம் ஆத்தாள் வீடு.. அதிலும் தரித்திரம் மாமியார் வீடு.
  • முட்டாளிடம் முத்தம் பெறுவதைக்காட்டிலும் அறிவாளியிடம் அறை வாங்குவது மேல்.
  • அண்டத்தை சுமக்கிறவனுக்கு சுண்டைக்காயெல்லாம் ஒரு சுமையா?
  • கொஞ்சம் தெரிந்தவன் அதையே  திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டு இருப்பான்.
  • மாரத்தானே ஆனாலும் குழந்தையின் ஒட்டம் என்னவோ தாய் வரைக்கும்தான்.

பங்காளிக்கு பல்லிலே விஷம்

  • முதலில் வயிற்றில் பாரத்தை ஏற்றிவிட்டு அதன்பின் முதுகில் பாரத்தை ஏற்று.
  • ஆகிறவன் அரைக்காசிலும் ஆவான். ஆகாதவன் ஆயிரம் கொடுத்தாலும் ஆகான்.
  • அதிகாரம் இல்லாவிட்டாலும் பரிவாரம் வேண்டும்.
  • பங்காளிக்கு பல்லிலே விஷம்.
  • இழுக்கத்தின் மிக்க இழுக்கில்லை, ஒழுக்கத்தின் மிக்க உயர்வில்லை.
  • பேராசைகொள்வது தரித்திரம் அது என்றுமே தீராத உபத்திரம்.
  • தலை முழுகினால் எண்ணெய் போகும். தலையில் எழுதப்பட்டுள்ள தலையெழுத்து போகுமா?
  • அட்டையிடம் போய் இரத்ததானம் செய்யும்படி கேட்டானாம்.
  • அவனவனுக்கு ஒரு கவலை, நம் ஐயாவிற்கு மட்டும் பத்து கவலை.
  • இருட்டு வீட்டுக்குள் போனால் திருட்டு கை சும்மா இருக்குமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!