"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Muthurai – மூதுரை

Muthurai – மூதுரை. மூதுரை என்பது பழமொழியை குறிக்கிறது. இந்த பழமொழி “முதுமொழி” என்ற பெயரிலும் அழைக்கப்பட்டுவருகின்றது.

இந்த பதிவில் நமது புரிதலை தொடர்ந்து புணரமைக்கும் முதுமொழியான நம் முன்னோர்களின் அனுபவம் வாய்ந்த மூதுரை என்னும் பழமொழிகள் (Experienced Proverbs) சிலவற்றைப்பற்றி பார்ப்போம்…

வாருங்கள் பார்க்கலாம்…

Muthurai – மூதுரை – வித்தை – அவித்தை

  • குணம் இல்லா வித்தை அவித்தை.
  • வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
  • அண்ணாமலையார் அருள் உண்டானால் மன்னார்சாமி மயிரை பிடுங்கிடுமா?
  • அழுக்கைத் துடைத்து மடிக்குள் வைத்தாலும் புழுக்கை குணம் போகவே போகாது.
  • நாணமில்லா கூத்தியர்க்கு நாலுபக்கமும் வாசல்.
  • அண்ணாவி பிள்ளைக்கு பணம் பஞ்சமா?.. அம்பட்டன் பிள்ளைக்கு மயிர் பஞ்சமா?
  • கண்டதைப் படிப்பவன் பண்டிதன் ஆவான்.
  • மருந்து கால் மதி முக்கால், மந்திரம் கால் தந்திரம் முக்கால்.
  • தன்னாலே தான் கெட்டால், அதற்கு அண்ணாவி என்ன செய்வார்?
  • காலுக்குதக்க செருப்பும், கூலிக்குத் தக்க உழைப்பும் வீறுநடை போட செய்யும்.
  • காலளவே ஆகுமாம் கப்பலின் ஓட்டம், நூலளவே ஆகுமா நுண்சீலை.
  • காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத்தான் தெரியும்.
  • குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
  • குடிக்கிறது கூழ் கொப்பளிக்கிறதுக்கு பன்னீரா?
  • குடும்பத்தில் இளையவனும் கூத்தாடியில் கோமாளியும் ஆகாது.
  • குமரி தனியாகப் போனாலும் கொட்டாவி தனியே போகாது.
  • குரு மொழி மறந்தோன் திருவழிந்து போவான்.
  • குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
  • குற்றமுள்ள நெஞ்சும், குறும்பியுள்ள காதும்  குறுகுறுக்கும்.
  • கெட்டாலும் செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.

கொற்றவன் – கற்றவன்

  • கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
  • கொண்டானும் கொடுத்தானும் ஒன்று, கலியாணத்தைக் கூட்டி வைத்தவன் வேறு.
  • கொள்ளிக்கு எதிர்போனாலும், வெள்ளிக்கு எதிர்போகலாகாது.
  • கொற்றவன் தன்னிலும் கற்றவன் மிக்கோன்.
  • கோணிகோடி கொடுப்பதிலும் கோணாமற் காணி கொடுப்பது நல்லது.
  • கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
  • சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
  • சின்னப்புள்ள வெள்ளாமை வீடு வந்து சேராது.
  • செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்.
  • கடுங்காற்று மழை கூட்டும் கடுஞ் சிநேகம் பகை கூட்டும்.
  • கணக்கன் கணக்கைத் தின்னாவிடில், கணக்கனை கணக்கு தின்று விடும்.
  • கண் குருடு ஆனாலும் நித்திரைதான் குறையுமா?
  • கண்டது சொன்னால் கொண்டிடும் பகை.
  • கப்பல் ஏறி பட்டகடன், கொட்டை நூற்றா முடியும்.
  • கல்லடி பட்டாலும் படலாம் கண்ணடி படக்கூடாது.
  • கல்லடிச் சித்தன் போனவழி, காடுமேடெல்லாம் தவிடுபொடி.
  • கல்லாடம் [ நூல்] படித்தவனோடு மல்லாடாதே.
  • கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம்.
  • கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல்.
  • காடு காத்தவனும் கச்சேரி காத்தவனும் பலன் அடைவான்.

காரியம் – வீரியம்

  • காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்கு கம்பு பிடுங்க பயமா?
  • காப்பு சொல்லும் கைகளின் மெலிவை.
  • காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ?
  • கடன் வாங்கி கடன் கொடுத்தவனும் கெட்டான், மரம் ஏறிக் கைவிட்டவனும் கெட்டான்.
  • கடிந்த சொல்லினும் கனிந்த சொல்லே சிறந்தது.
  • ஆயிரம் வந்தாலும் ஆத்திரம் ஆகாது.
  • வேகிற வீட்டுக்கு வெட்டுகிறான் கிணறு.
  • உழக்கு நெல்லுக்கு உழைக்க போய் பதக்கு நெல்லை பறிகொடுத்தானாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!