"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Different Types of Proverbs

“மணலில் முத்துக்களைப் போலவும். சுரங்கத்தில் தங்கத்தைப் போலவும் சரித்திரத்தில் பழமொழிகள் ஒளிவீசுகின்றன” என்றார் அறிஞர் ஏராஸ்மஸ் (Erasmus). 

உண்மைதான்.. பசுமரத்தாணிபோல் நெஞ்சில் ஆழமாகப் பதியக்கூடியவை பழமொழிகள். நீண்ட அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட தத்துவார்த்த சிந்தனையே பழமொழிகள் எனலாம்.

பழமொழிகளில் வாழ்வியல் (Biology), சித்தாந்தம் (Ideology), கல்வி (Education), இலக்கியம் (Literature), மருத்துவம் (Medicine), விவசாயம் (Agriculture) மற்றும் நடைமுறை வாழ்க்கையை வேடிக்கையாக பேசும் நையாண்டி பழமொழிகள் என பல்வேறுபட்ட பழமொழிகள் உள்ளன. அவ்வாறான பல்வேறுபட்ட பழமொழி (Different type of Proverbs) தொகுப்பினை இப்பதிவில் பார்ப்போம்.

  • அகதி பெற்றாள் பெண்பிள்ளை அதிர்ஷ்ட வெள்ளி பூராடமாம்.
  • சனியன் பிடித்தவள் சந்தைக்கு போனாலும் புருஷன் அகப்பட மாட்டான்.
  • சனிப்பிணம் தனிப்பிணமாக போகாது.
  • கொடும்பாவி சாகாதா? கோடைமழைதான் பெய்யாதா?..
  • அந்திமழை அழுதாலும் விடாது.
  • இழுக்குடைய பாட்டிற்கு இசை நன்று.
  • கதவை திற காற்று வரட்டும்னு பாத்தா காலங்காத்தால கண்ராவில்ல வந்து நிக்குது.
  • விரலுக்கு தக்க வீக்கம், மாவுக்கு தக்க பணியாரம்.
  • ஒருவராய் பிறந்தால் தனிமை, இருவராய் பிறந்தால் பகைமை.
  • ஓசைபெறும் வெண்கலத்தை காட்டிலும் ஓசைபெறா மண்கலம் ஒசத்தி.
  • குனிய குனிய குட்டுவான் குனிந்தவன் நிமிர்ந்தால் குட்டியவன் நடையை கட்டுவான்.
  • தென்னையை வச்சவன் தின்னுட்டு செத்தான். பனையை வச்சவன் பாத்துட்டு செத்தான்.
  • கம்பங்கதிரை கண்டா கை சும்மா இருக்காது, மாமன் மகளை கண்டா வாய் சும்மா இருக்காது.
  • எல்லோருடைய தலையிலும் எட்டு எழுத்து. பாவி என் தலையில் மட்டும் பத்து எழுத்து.
  • மண் குதிர் ஐ நம்பி ஆற்றில் இறங்காதே.
  • சோழியன் குடுமி சும்மாடு ஆடாது.
  • மகன் செத்தாலும் சாகட்டும்.. மருமகள் கொட்டம் அடங்க வேண்டும்.
  • இலை சாய்கிற பக்கம்தான் குலையும் சாயும்.
  • ஆடி வெள்ளிக்கு அழைக்காத மாமியாரை தேடிப்பிடித்து செருப்பாலே அடி.
  • உள்ளூரு பெண்ணும் அயலூரு மண்ணும் ஆகவே ஆகாது.
  • கம்புக்கு களை எடுத்த மாதிரியும்.. அப்படியே தம்பிக்கு பெண் பார்த்த மாதிரியும் இருக்கட்டுமேன்னுதான்.
  • தனக்கே தகறாராம்… தம்பிக்கு தயிர்சோறாம்…
  • கத்து வச்ச கைவேலை காலாகாலத்துக்கும் உதவுமுங்கோ.
  • ஆட்டிக்கிட்டு போற கைய கொஞ்சம் நீட்டிக்கிட்டு போனா போடற மகராசன் போட்டுட்டு போறான்.
  • அதிகாலையில் எழுந்தவனும் இளவயதில் மணந்தவனும் எக்காலத்திலும் வருந்தியதே இல்லை.
  • அண்டையிலே காவேரி ஓடினாலும் முழுகவே மாட்டாளாம் மூதேவி.
  • ஆண்டியும் ஆண்டியும் கட்டிக்கொண்டால் சாம்பலும் சாம்பலும் ஒட்டிக்கொள்ளும்.
  • ஆண்டிகள் எழுந்து குண்டியை தட்டினால் பறப்பது அத்தனையும் சாம்பலே சாம்பலே .
  • பாலினால் ஒருமுறை நாக்கை சுட்டவன் மோரை கண்டாலும் ஊதியே குடிப்பான்.
  • சித்திர வேலைக்காரனுக்கு கை உயர்த்தி, செந்தமிழ் புலவனுக்கோ நா உயர்த்தி.
  • வானத்தில் இருந்த சனியனை ஏணியை வைத்து இறக்கி விட்டாளாம்.
  • சுத்தி சூரமுள்ளு காதாதூரம் காரமுள்ளு.
  • ஐயர் முனகல் அத்தனையும் வேதம்தாங்கோ.
  • கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது.
  • ஆதியில் வந்தவ வீதியில் நிற்க, அந்தியில் வந்தவ பந்தியில் இருக்காளாம் 
  • நித்தம் இட்டால் முத்தமும் சலிக்கும்.
  • சித்திரகுப்தனுக்கு தெரியாமல் சீட்டு கிழியுமா?
  • அயன் இட்ட எழுத்தில் அணுவளவும் தப்பாது.
  • உத்தராயணம் என்றழுது உறியை கட்டிக்கொண்டு சாகாத.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!