"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Insightful Proverbs – நுண்ணறிவு பழமொழி

சிக்கலான நுண்ணறிவுகளை சுருக்கமாக வெளிப்படுத்தும் திறன் பழமொழிகளுக்கு உண்டு.

இவைகள் பல தத்துவ மொழிகளாகவும், வேடிக்கை மொழிகளாகவும் இன்றும் நம்மிடையே உறவாடி வருகின்றன.

அப்படியான நுண்ணறிவுகளை வெளிப்படுத்தும் திறன்கொண்ட பழமொழிகள் சிலவற்றைப்பற்றி இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்… வாருங்கள் பார்க்கலாம்.

மரக்கட்டை சாமி

  • கடன் இல்லா கஞ்சி கால் வயிறு போதும்.
  • அகல் வட்டம் பகல் மழை, அடிவானம் கருத்தால் அப்பொழுதே மழை.
  • அடுப்பு மூன்றானால் அம்மா பாடு திண்டாட்டம்தான்.
  • வரும்விதி வந்தால் படும்விதி படத்தான் வேண்டும்.
  • மயிரை சுட்டால் கரியாகுமா ?
  • தொடையில் உள்ள புண் நடையில் காட்டும்.
  • மாடம் இடிந்தால் கூடம்.
  • உள்ளூரில் ஓணான் பிடிக்காதவன் உடையார்பாளையம் போய் உடும்பு பிடிப்பானா?
  • சீலை இல்லையென்று சித்தி வீட்டுக்கு போனாளாம் அவள் ஈச்சம்பாயைக் கட்டிக்கொண்டு எதிரே வந்தாளாம்.
  • பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம் வேட்டி.
  • புத்திகெட்ட ராசாவுக்கு மதிகெட்ட மந்திரிதான் வாய்க்கும்.
  • அரக்கப்பரக்க பாடுபட்டாலும் படுக்க பாய் இல்லையே ராசா.
  • ஐங்காயம் கொண்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகாதாம் பேய்சுரைக்காய்க்கு.  
  • உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
  • சங்கரா சங்கரா என்றால் சாதம் வாயில் வந்து விழுமா?
  • பிச்சை எடுத்தாராம் பெருமாளு அதை பிடுங்கி தின்னாராம் அனுமாரு.
  • தாலிக்கு நெருப்பு சாட்சி வேலிக்கு ஓணான் சாட்சி.
  • மரக்கட்டை சாமிக்கு சப்பாத்திக்கட்டைதான் காணிக்கை.
  • ரெண்டு பொண்டாட்டிக்காரனுக்கு கொண்டை இருந்தால் என்றுமே திண்டாட்டம்தான்.
  • ஐயர் வரும்வரை அமாவாசை காத்திருக்குமா?

சாமி வரம்

  • பணக்காரன் பின்னும் பைத்தியக்காரன் பின்னும் பத்துபேர்.
  • இழவுக்கு வந்தவள் தாலி அறுப்பாளா?.
  • விடிய விடிய ராமாயணம் கேட்டானாம் .. விடிஞ்சப்புறம் கேட்டா சீதைக்கு ராமன் சித்தப்பா என்றானாம் .
  • பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டா கொட்டைப் பாக்குக்கு விலை சொன்னானாம்.
  • சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி இடம் கொடுக்க மாட்டான்.
  • ஆகாததும் வேகாததும் ஆண்டவனுக்கு, அதிலும் கெட்டது குருக்களுக்கு.
  • ஆண்டிமகன் ஆண்டியானால் நேரமறிந்து சங்கு ஊதுவான்.
  • கப்பல்காரன் பொண்டாட்டி தொப்பைக்காரி, அந்த கப்பல் உடைந்து போனால் அவள் பிச்சைக்காரி.
  • விடிஞ்சா இருப்போமோ இல்லையோ என்று ஒவ்வொரு குடிமக்களின் மனசும் அடித்துக்கொண்டால் அதன் பெயரே “விடியல்” ஆட்சி.
  • பள்ளத்திலே இருந்தா பொண்டாட்டி, மண் மேட்டிலே இருந்தா அக்கா! [அட… கொக்க மக்கா]
  • அக்கா ஆனாலும் சக்களத்தி சக்களத்திதான். [அப்படிப் போடு அருவாளை.. அடியே.. இங்க வாடி என் சக்களத்தி மவளே…]
  • சம்பளம் இல்லா சேவகனும், கோபப்படாத எஜமானும் உருப்பட்ட மாதிரிதான்.
  • வேண்டாவெறுப்பா பிள்ளையை பெத்து, அதுக்கு “காண்டாமிருகம்”னு பெயரும் வச்சானாம்.
  • அம்மணமானவர்கள் வாழும் ஊரில் கோவணம் கட்டியவன் கோமாளி.
  • படப்போட திங்குற மாட்டுக்கு புடுங்கிபோட்டா காணுமா ?
  • கம்முன்னு கிடக்குமாம் நாய், அதை நோண்டி கெடுக்குமாம் பேய்.
  • சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி.
  • கடலை தாண்ட ஆசையுண்டு, ஆனால் கால்வாயை தாண்ட கால் இல்லை.
  • ஒட்டைக்கூத்தன் பாட்டுக்கு ரெட்டைத் தாழ்ப்பாள்.

அண்ணன் தம்பி உறவு

  • காட்டாற்றை கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, அதன் பின் நீயாரோ நான்யாரோ.
  • இடித்தவளும், புடைத்தவளும் இங்கே இருக்க, எட்டிப் பார்த்தவள் அள்ளிக்கொண்டு போனாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!