"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Badusha and Bakiri – பாதுஷாவும் பக்கிரியும்

ஒளிதனை பாய்ச்சி இருட்டினை விலக்கி மெழுகுவர்த்தியானது எவ்வாறு நமக்கு வழிகாட்டுகிறதோ அதுபோல வழி கெட்டலையும் நம் வாழ்க்கைக்கு ஒளிகாட்டி வழிநடத்தி செல்வதில் முதன்மையாக விளங்குவது பழமொழிகளே ஆகும்.

அப்பழமொழிகளிலுள்ள பல சூட்சமங்களை “Badusha and Bakiri – பாதுஷாவும் பக்கிரியும்” என்னும் இப்பதிவில் பார்க்கலாம் வாருங்கள்.

Badusha and Bakiri – பாதுஷாவும் பக்கிரியும்

  • பணமிருந்தால் பாதுஷா, பணமில்லாவிட்டால் பக்கிரி.
  • உள்ளது சொல்ல இது ஊருமல்ல, நல்லது சொல்ல அது நாடுமல்ல.
  • உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
  • ஊர் நஷ்டம் ஊரிலே, தேர் நஷ்டம் தெருவிலே.
  • எடுப்பாரைக் கண்டால் குடம்கூட கூத்தாடும்.
  • எட்டு குஞ்சு அடித்தாலும் சட்டிக்கறிக்கு காணாது.
  • எழுதாக்கடனுக்கு அழுதால் தீருமா?
  • ஏற்கனவே மாமியார் பேய்க்கோலம், அதிலும் கொஞ்சம் மாக்கோலம்.
  • ஒண்டிக்காரன் பிழைப்பும், வண்டிக்காரன் பிழைப்பும் ஒன்றுதான்.
  • ஒரு பிள்ளை பெற்றவளுக்கு உறியில் சோறு, நாலுபிள்ளை பெற்றவளுக்கு நடுத்தெருவில்தான் சோறு.
  • காணிகாணியாய் சம்பாதித்து கோணி கோணியாய் செலவழித்தானாம்.
  • காப் பொன்னிலும் மாப்பொன் திருடுவான் தட்டான்.
  • காலம் கனிந்துவந்தால் பெருச்சாளியும் காவடி எடுத்து ஆடுமாம்.
  • குண்டு பட்டும் சாகாதவன் வண்டு கடித்து செத்தானாம்.
  • குதித்து குதித்து மாவிடித்தாலும் குந்தானிக்கு ஒரு கொழுக்கட்டைகூட கிடைக்காது.
  • குத்தரிசி குத்துகிற வீட்டில் வாய்க்கரிசிக்கு வழி இல்லையாம்.
  • ஊரார் வீட்டு கல்யாணமே, ஏன் அவிழ்ந்தாய் என் கோவணமே.
  • கேடுகெட்ட நாயே வீட்டைவிட்டு போயேன்…
  • கோடிபேர் கூடி மிதித்தாலும் கூழாங்கல் சாந்துக்கு ஆகுமா?
  • கொக்கரிக்கும் ஜம்பமெல்லாம் கூடைக்குள் அடங்கிப்போகும்.

உலக்கையும் உளியும்

  • சாக்கடை புழுவிற்கு போக்கிடம் ஏது?
  • சிறைபட்டாயோ குறைபட்டாயோ.
  • திடுக்கென்று வாழ்க்கைப்பட்டு வெடுக்கென்று அறுத்தாளாம்.
  • பாராத காரியம் பாழாய்போகும்.
  • புலியூருக்கு பயந்தல்லோ நரியூருக்கு வந்தேன்… நரியூருக்கு வந்தால் நரியூரும் புலியூராய் பொங்கி கிடக்குதே சிவனே அய்யா.
  • பூனைக்கு கும்மாளம் வந்தால் பீத்தல் பாயை சுரண்டுமாம்.
  • பெண்சாதி இறந்தால் புது மாப்பிள்ளை.
  • பெண்டாட்டி கொண்டதும் போதும், அவளால் திண்டாட்டம் பட்டதும் போதும்.
  • போனதை நினைத்தழுபவன் புத்தி கெட்டவன்.
  • மலைவிழுங்கி மகாதேவனுக்கு பாறாங்கல்லே அப்பளம்.
  • மூக்கறையனுக்கு வாழ்க்கைப்பட்டால் முன்னும் போகவிடான், பின்னும் போகவிடான்.
  • வங்காளத்து நாய் சிம்மாசனம் ஏறிச்சுன்னு சொல்லி வண்ணான் வீட்டு நாய் வெள்ளாவிமேல் ஏறிச்சாம்.
  • பகைவனின் புன்னகையைவிட நண்பனின் சினம் மேலானது.
  • ஐயப்பட்டால் பைய நட.
  • உலக்கை தேய்ந்தது, உளிக்கு பிடி ஆனது.
  • உறவு உண்ணாமல் கெட்டது. உடம்பு உடுத்தாமல் கெட்டது.
  • ஊண் ஒடுங்க வீண் ஒடுங்கும்.
  • ஊருக்கு ஆகாத பிள்ளை தாய்க்கும் ஆகான்.
  • எட்டாத பழத்துக்கு கொட்டாவி விட்டதுபோல.
  • ஓங்கி அறைந்தால் ஏங்கி அழ சீவனில்லை.

நில்லாத காலடி

  • புலி பதுங்குவதும், “கடா” பின்வாங்குவதும் பாய்ச்சலுக்கே அடையாளம்.
  • காசில்லாதவனை விலைமகளும் நம்ப மாட்டாள்.
  • கூப்பாடு போட்டால் சாப்பாடு வருமா?
  • கொலைக்கு அஞ்சாதவன் பழிக்கு அஞ்சுவானா?
  • சமைத்து படைக்க தெரியாது, ஆனால் துடைத்து கவிழ்க்கமட்டும் தெரியும்.
  • சில்லரைக்கடன் வாழ்வை சீரழிக்கும்.
  • பெண்ணின்பம் எண்ணாதார் பேரின்பம் காண்பர்.
  • சோற்றுப்பானை உடைந்தால் மாற்றுப்பானை இல்லை.
  • தின்ன தின்ன கேட்குமாம் பிள்ளைபெத்த வயிறு.
  • நகைத்து இகழ்வோனை நாயென நினை.
  • நில்லாத காலடி நெடுந்தூரம் போகும்.
  • நேற்று வந்தாளாம் குடி, அவள் தலையில் விழுந்ததாம் இடி.
  • பசித்த செட்டி பாக்கை தின்றானாம்.
  • பத்தினி படபடக்க, பானை சட்டி லொடலொடத்ததாம்.
  • பத்தோடு பதினொன்று அத்தோடு இது ஒன்று.
  • பந்தமும் கூத்தும் விடிந்தால் தெரியும்.
  • பெண்டாட்டி ஆசை திண்டாட்டத்தில் போய் விட்டது.
  • புகை புகாத இடத்திலும் புகுமாம் தரித்திரம்.
  • பெண்ணுக்கு மாமியாரு.. பிள்ளைக்கோ வாத்தியாரு
  • வெல்லம் சாப்பிடுகிறவன் ஒருவன், விரலை சூப்புகிறவன் மற்றொருவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!