"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Elutha Ilakkiyam of Useful Proverbs

“ஆயிரம் நூல்களைக் கற்பதைவிட ஆன்றோர்களாகிய நம் சான்றோர்கள் கூறிய பழமொழிகளே அதிக அறிவை தரும்” என்கிறார் மேனாட்டு அறிஞர் “லாவேட்டர்”.

பழகுமொழி, தொன்னெறி மொழி, முதுமொழி, வாய்மொழி, சொலவடை, எழுதா இலக்கியம் என பலபெயர்களில் அடையாளப்படுத்தப்படுகின்ற இப்பழமொழிகள் ஆழமான வாழ்வியல் உண்மைகளையும், பாடங்களையும் உள்ளடக்கியுள்ளன..

ஆங்கிலத்தில் “Proverb” என அழைக்கப்படும் இது இந்திய மொழிகளான மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடத்தில் முறையே “பழஞ்சொல்”, “நாதுடி”, “நாண்ணுடி” என்று அழைக்கப்பட்டுவருகின்றன.

இந்த பதிவில் நமது சமகால வாழ்க்கையில் தொடர்ந்து எதிரொலிக்கும் மற்றும் வழிகாட்டுதலை வழங்கும் புதுமையான மற்றும் பயனுள்ள பழமொழிகளை பார்ப்போம்.

  • ஒட்டுத்திண்ணை நித்திரைக்கு கேடு.
  • ருசிகண்ட பூனை உறிக்கு உறி தாவுமாம்.
  • எச்சில் இரக்க அடிக்கும், பற்று பறக்க அடிக்கும்.
  • எடுக்கிறது எருமைச்சாணி, படுக்கிறது பஞ்சு மெத்தை.
  • எடுக்கிறது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.
  • எண்ணப்பட்ட குதிரையெல்லாம் மண்ணைப் போட்டுக்கொள்ள, தட்டுவாணிக் குதிரைவந்து கொள்ளுக்கு அழுததாம்.
  • ஒரு பணம்தான் கொடுப்பானாம், ஆனால் ஓயாமல்வந்து அழைப்பானாம்.
  • ஓணான் வேலிக்கு இழுக்க தவளை தண்ணீருக்குள் இழுத்துச்சாம்.
  • ஓதுவாரை விட உழுவார் என்றும் உயர்ந்தோரே!
  • கனத்தை கரம் காக்கும், கருவாட்டுப்பானையை பூனை காக்கும்.
  • காக்கையும் கத்திப்போகுது, கருவாடும் காஞ்சுபோகுது.
  • காண்பாரைக் கண்டு கழுதையும் தூரதேசம் போச்சாம்.
  • காரியக்காரன் கொல்லையிலே கழுதைவந்து மேயுதாம்.
  • குதிரை இல்லாத ஊரில் கழுதைதான் தம்பிரான்.
  • குருவுக்கு நாமம் குழைத்து போடு.
  • கொழுக்கட்டைக்கு தலையும் இல்லை, கூத்தாடிக்கு முறையும் இல்லை.
  • கோல் ஆட குரங்காடும்.
  • சித்தன் போக்கு சிவன்போக்கு, ஆண்டி போக்கு அதே போக்கு.
  • சித்திரகுப்தனுக்கு தெரியாமல் சீட்டு கிழியுமா?
  • சுட்டிக்காட்டாத வித்தை சூடுபோட்டாலும் வாராது.
  • சூட்சுமத்தில் இருக்கிறது மோட்சம்.
  • தன்பலம் கொண்டுதான் அம்பலமும் ஏறவேண்டும்.
  • பங்காளியையும், பனங்காயையும் பதம் பார்த்து வெட்ட வேண்டும்.
  • பத்திலே பசளை, இருபதிலே இரும்பு.
  • அரணை கடித்தால் மரணம்.
  • அகழியில் முதலை விழுந்தால் அதுவே அதற்கு வைகுண்டமாம்.
  • பொன்னாங்கண்ணிக்கு புளியிட்டு ஆக்கினால் உண்ணாப் பெண்ணும் உழக்கு உண்பாள்.
  • பாம்பு தன் பசியை நினைக்க, தேரையோ தன் விதியை நினைத்து அழுததாம்.
  • புழுத்த சாணி கொழுத்த பணம்.
  • பூசாரி பூ முடிக்கப் போனானாம். பூவாலங்காடு பூவாக்கடாய் ஆச்சுதாம்.
  • நண்டை நாளி கொண்டு அளக்கலாமோ?
  • பெண்ணுக்கு பொன்னிட்டு பார், சுவருக்கு மண்ணிட்டு பார்.
  • பைய பைய மென்றால் பனையைக்கூட மெல்லலாம்.
  • பொக்கை வாய்க்கல்லோ பொரியுருண்டை கேக்குதாம்.
  • பொல்லாத காலம் சொல்லாமலேயே வரும்.
  • பொன்னை கழித்தாலும் பொடிக்கீரையை கழிக்கலாமா?
  • போய்வந்தது பொன்னம்பலம், திரும்பி வந்தது திருவம்பலம்.
  • மங்கை தீட்டானால் கங்கையில் மூழ்குவாள், கங்கையே தீட்டானால் எங்கே மூழ்குவாள்.
  • மடத்தை கட்டி அதற்கு மரநாயை காவல் வைத்தானாம்.
  • முறத்தடி பட்டாலும் முகத்தடி படக்கூடாது.
  • மூத்தோர் சொல்லும், முதிர் நெல்லிக்காயும் முன்னே புளிக்கும் பின்னே இனிக்கும்.
  • வாழ்ந்துகெட்ட வீட்டில் வறுவோட்டுக்கும் பஞ்சம்.
  • விட்டதடா ஆசை விளாம்பழத்து ஓட்டோடே..
  • வெட்டியானும் பிணமும் கட்டிக்கொண்டு அழட்டும். நமக்கென்ன வந்துச்சு தம்பிரானே.
  • வேலிக்கு ஓணான் சாட்சி, வெந்ததுக்கு சொக்கன் சாட்சி.

10 thoughts on “Elutha Ilakkiyam of Useful Proverbs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!