"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Illuminating Proverbs – ஒளிவீசும் பழமொழிகள்

Illuminating Proverbs – ஒளிவீசும் பழமொழிகள். ஒரு விஷயத்தை அல்லது வாழ்வியல் நெறிமுறைகளை பிறருக்கு எளிதாக புரியவைப்பதற்காக நம் முன்னோர்கள் பயன்படுத்தி வந்த இனிய சொற்றொடர்களையே நாம் “நீதியுரைகள்” என்கிறோம்.

மனதை பண்படுத்தி வாழ்வை வழிநடத்தும் இந்த நீதியுரைகளையே நாம் “பொன்மொழிகள்” (Mottoes) என்றும் “பழமொழிகள்” (Proverbs) என்றும் குறிப்பிட்டு மகிழ்கிறோம்.

வாருங்கள் நீதியுரைகளை போதிக்கும் சில பழமொழிகளை இப்பதிவுகளில் பார்க்கலாம்.

நிறைகுடம் – குறைகுடம்

  • நிறைகுடம் தழும்பாது குறைகுடம் கூத்தாடும்.
  • அள்ளிக் கொடுத்தால் சும்மா, அளந்து கொடுத்தால் கடன்.
  • தேரோட போச்சு திருநாடு, தாயோட போச்சு பிறந்த வீடு.
  • கடையும்போது வராத வெண்ணை குடையும்போது வரப்போகுதா?
  • குலத்தை கெடுக்கவந்த கோடாரி கம்பே.
  • அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
  • கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவி பாடும்.
  • எட்டி மரம் பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன.
  • கடுங்காற்று மழை கூட்டும் கடும் சிநேகம் பகை கூட்டும்.
  • குருமொழி மறந்தோன் திருவழிந்து போவான்.
  • குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
  • ஊருடன் பகை வேருடன் கெடும்.
  • மொழி தப்பினவன் வழி தப்பினவாவான்.
  • உதட்டுக்கு மிஞ்சின பல்லும் திருட்டுக்கு மிஞ்சின கையும் என்றுமே அவஸ்தைதான்.
  • அரசமரத்தடி புள்ளையாரே அடியேனுக்கும் சேர்த்து ஒரு பொண்ணு பாருமய்யா.
  • தேரை இழுத்து தெருவில் விட்ட கதைபோல.
  • சூத்திர வேதன் சாஸ்திரம் பார்ப்பான்.
  • சாஸ்திரம் பார்க்காத வீடு சமுத்திரம். சமுத்திரம் பார்த்த வீடு தரித்திரம்.
  • கணக்கனை பகைத்தாயோ காணி நிலம் இழந்தாயோ.
  • சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?

தருமம் – கருமம்

  • சொல்லிப்போ சுகத்திற்கு சொல்லாமலே போ துக்கத்திற்கு.
  • வில் வல்லவனைவிட சொல் வல்லவனை வெல்லல் அரிது.
  • தனக்கு தனக்குன்னா புடுக்கும் களை வெட்டும்.
  • தருமம் செய்தால் கருமம் தொலையும்.
  • எளியவன் கண்ணீர் வலியவனை அழிக்கும்.
  • அடுப்பே வனவாசம் கடுப்பே கைலாசம்.
  • அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
  • சொறிந்து தேய்க்காத எண்ணையும், கடைந்து சேர்க்காத வெண்ணையும் வீண்.
  • தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் கூடாது.
  • இங்கிதம் தெரியாதவர்க்கு சங்கீதத்தால் என்ன பயன்?
  • பசித்த கணக்கன் பழங்கணக்கையெல்லாம் பார்த்து தருகிறேன் என்றானாம்.
  • இறைக்க ஊறும் மணற்கேணி, ஈய பெருகும் பெருஞ்செல்வம்.
  • உடைமையும் வறுமையும் ஒருவழி நில்லா.
  • சுக்கு கண்ட இடத்திலே முக்கி குழந்தை பெறுவாளா?
  • கடன்கிடன் வாங்க நான் கும்பிட , நீ யார் கூத்தி காலிலே விழுந்து கும்பிட?
  • தம்பி போவது கால்நடையாக ஆனால் பேச்சு மட்டும் பல்லக்கில் போகுது.
  • ஆறு காதம் என்கின்றபோதே கோவணத்தை அவுத்து குடுமியில் கட்டிக்கொண்டானாம்.
  • அரிசி சிந்தினால் அள்ளி விடலாம். வார்த்தை சிந்தினால் வாரத்தான் முடியுமா?
  • சிங்கார சிறுக்கி ஆளாகறதுக்கு முன்னாடியே ஆம்பிளைப்புள்ளை வேணுமின்னு அரசமரத்தை சுத்தி வந்தாளாம்.

பூசாரி – ஆசாரி

  • ஒழுவுற வீட்டுல இருந்தாலும் இருக்கலாம், அழுவுற வீட்டுல இருக்கவே கூடாது.
  • அற்ப சகவாசம் பிராண சங்கடம்.
  • அகப்பை குறைந்தால் கொழுப்பெல்லாம் அடங்கும்.
  • அண்ணண் பிள்ளையை நம்புறதைவிட தென்னம்பிள்ளையை நம்பு.
  • பகையாளி குடியை உறவாடி கெடு.
  • பூசாரி பொய்யும், கவி புனைவோன் பொய்யும், ஆசாரி பொய்க்கு அரை பொய் ஆகாது.
  • உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!