"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Life Philosophies of Scholars

தத்துவம் (Philosophy) என்பதனை தமிழில் “மெய்யியல்” அல்லது “மெய் கோட்பாட்டு இயல்” என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.. ஒரு பொருளின் அல்லது ஒரு செயலின் உண்மைத் தன்மையை உள்ளது உள்ளபடி உணர்ந்து  அதன் சூட்சுமத்தை அறிந்து கொண்டவர்கள் அதனை வெளியுலகுக்கு நயம்பட உரைப்பது அல்லது உணர்த்துவதை “தத்துவம்” எனலாம். 

தத்துவங்களில் பல துறைசார்ந்த பிரிவுகள் உள்ளன என்றாலும் அதில் வாழ்க்கை நெறிமுறைகளை செப்பனிட உதவும் வாழ்வியல் தத்துவமும் ஒன்று.

வாழ்வியல் சார்ந்த பல தத்துவார்த்த சிந்தனைகள் ஞானத்தில் செறிந்த தெளிப்பாகவும் இன்னும் சில விரக்தியின் வெளிப்பாடால் எழுந்த சிதறல்களாகவும் இருக்கலாம். இங்கு உலக அறிஞர்கள் சிலரால் உலகுக்கு உணர்த்தப்பட்ட வாழ்வியல் சார்ந்த சில தத்துவார்த்த சிந்தனைகளை அவர்கள் சார்ந்த நாடுகளின் அடிப்படையில் “அறிஞர்களின் வாழ்வியல் தத்துவங்கள் – Life Philosophies of Scholars.” என்னும் இந்த பதிவின்மூலம் அறிந்துகொள்வோம் வாருங்கள்…

  • பட்டப்பகலை இரவென்று அரசன் சொன்னால் ஆம், அதோ நட்சத்திரங்கள் தெரிகின்றன என்று சொல்ல பழகிக்கொள்.
  • புலியை படைத்ததற்காக கடவுளை கடிந்துகொள்ளாதீர்கள். அதற்கு சிறகுகள் அளிக்காததற்கு கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள்.
  • கத்திக்கு அதன் உரிமையாளர் யாரென்று தெரியாது. எனவே உன்னையும் அது கத்த வைக்கலாம்.
  • தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருக்கும் நாய்கள் ஓநாயைப்  பார்த்தால் ஒன்று கூடி விடும்.
  • உழைப்பதற்கு ராட்டினத்தை நீ தயாராக வைத்திருந்தால்தான் பஞ்சு பொதிகளை கடவுள் உன்னிடம் அனுப்பி வைப்பான்.
  • அண்டை வீட்டுக்காரனை நேசி. ஆனால் குறுக்குச்சுவரை மட்டும் எடுத்து விடாதே.
  • மனைவியை பற்றி ஊர்முழுவதும் தெரிந்த ரகசியம். கணவனுக்கு மட்டும் தெரிவதே இல்லை.
  • வயிற்றுக்கு மட்டுமே உணவளிப்பதை சிந்திப்பவன் தன் தலையை பட்டினி போடுகிறான்.
  • உலகில் நரைத்த தலைகள் அதிகமாகவே உள்ளன. ஆனால் அறிவாளிகள்தான் குறைவாக உள்ளனர்.
  • பேரறிவுக்கு பசிதான் பணிப்பெண்.
  • பயன்படாத விவேகம் துருப்பிடித்த இரும்புக்கு சமம்.
  • ஒருமுறை பேசும்முன்னால் இருமுறை கேட்டுக்கொள்.
  • தாக்குதலே தற்காப்பில் முதன்மையானது.
  • பெண்ணின் முன் பக்கத்திலும், கழுதையின் பின் பக்கத்திலும்  ஆன்மீகவாதியின் அனைத்து பக்கத்திலும் எச்சரிக்கையாக இரு.
  • உலகம் உன்னை கைவிடுவதற்கு முன்னால் உலக ஆசைகளை நீ கைவிட்டுவிடு.
  • நண்பர்களைப்பெற நல்ல விலை கொடுக்க வேண்டும்… எதிரிகள் இலவசமாகவே கிடைப்பார்கள்.
  • அதிர்ஷ்டம் இருந்தால் சிலந்தி வலையும் சுவராக மாறும். அதிர்ஷ்டம் இல்லையென்றால் சுவரெல்லாம் சிலந்திவலையாகும்.
  • பழிக்கு பழி தீர்க்க நினைத்தால் இரண்டு சவக்குழிகளை தோண்டி வைத்துக்கொள். ஒன்று எதிரிக்கு மற்றொன்று உனக்கு.
  • எருதை பரிசாக பெற்றவன் பதிலுக்கு குதிரையை பரிசாக தரவேண்டி வரும்.
  • சுவர்க்கத்திற்கு பாதையுண்டு. ஆனால் அதில் யாரும் பயணிப்பதில்லை. நரகத்திற்கு வாயிலே இல்லை. ஆனால் அனைவருமே அங்கு சுவரேறி குதிக்கிறார்கள்.
  • குழந்தையை அடித்து வளர்க்காதவன் பின்னாளில் தன் மார்பிலும், தலையிலும் அடித்துக்கொண்டு அழ வேண்டிவரும்.
  • காதலர்கள் முதலில் விரும்புகிறார்கள், கல்யாணம் ஆனபின்பே  வருந்துகிறார்கள்.
  • வாழ்க்கை என்பது மது போன்றது. ஏனெனில் மயக்கம் தீர்ந்த பின்பும்கூட தலைவலி தீர்ந்தபாடில்லை.
  • பேசுவது விதைப்பு.. கேட்பது அறுவடை.
  • கடவுளுக்கு அஞ்சு, கடவுளுக்கு அஞ்சாதவனை கண்டால் அதிகம் அஞ்சு.
  • மூடனின் முத்தத்தை விட அறிவாளி தரும் அறை ஆனந்தமானது.
  • வாழ்க்கை என்றால் என்னவென்று தெரிந்துகொள்ளும் முன்பாகவே பாதி வாழ்க்கை முடிந்துவிடுகிறது.
  • வாழ்க்கை ஒரு வெங்காயம். அதில் கை வைத்தால் கண்ணீருக்கு பஞ்சமில்லை.
  • வாழ்க்கையின் முதற்பகுதி இரண்டாம் பகுதியை எதிர்பார்த்து கழிகிறது. இரண்டாம் பகுதியோ முதற்பகுதியில் வீணான நாட்களை நினைத்து அழுகிறது.
  • சமையற்காரர் ஒரு ஈ – ஐ சமைக்க நேர்ந்தால் அதன் தொடைக்கறி தமக்கே என்று எடுத்துவைத்துக்கொள்வார்.
  • உன் வெற்றியை கொண்டாட ஆயிரம்பேர் கூடுவர். தோல்வியின் ஆற்றாமையை நீ ஒருவனேதான் தேற்றிக்கொள்ளவேண்டும்.
  • மீன்கள் முள்ளை பார்ப்பதில்லை புழுவைத்தான் பார்க்கின்றன, அதுபோல மனிதன் ஆபத்தைப் பார்ப்பதில்லை லாபத்தைத்தான் பார்க்கிறான்.
  • ஒரு மனிதனின் நடத்தைகளைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமா? அவன் கையில் அதிகாரத்தை கொடுத்துப்பாருங்கள்.
  • கடவுள் உனக்கு நிறைய ஆடுகளைக் கொடுப்பார். ஆனால் அவைகளுக்கு நீதான் தழைகளை கொடுக்கவேண்டும்.
  • அடிமட்ட கூலி கொடுத்தாலும் ஆடு மேய்க்கும் வேலைக்குவர ஓநாய் தயாராகவே இருக்கும்.
  • அறிஞர்கள் ஞானத்தை தேடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் முட்டாள்களோ தான் அதனை பெற்றுவிட்டதாகவே நினைக்கிறார்கள்.
  • அகம்பாவம் ஒரு பொல்லாத குதிரையை போன்றது. அது ஒருமுறையேனும் தன்னுடைய ஏஜமானரை கீழே தள்ளாமல் விடாது.
  • வாயை மூடிக்கொண்டிருக்கும் வரை மூடனும் அறிஞன்தான்.
  • கடவுள் பாலைத்தான் கொடுப்பார். அதனை காய்ச்சுவதற்கு பாத்திரத்தையும் சேர்த்து கொடுப்பதில்லை.
  • கோழிகூட தண்ணீர் பருகும்போது நன்றியுடன் வானை பார்க்கும்.
  • கடவுள் ஒருவனை தண்டிக்க விரும்பினால் அவனுக்கு திருமணம் செய்துகொள்ளும் எண்ணத்தை ஊட்டுவார்.
  • பின்னாலிருந்து நீ விமர்சிக்கப்பட்டால் நினைவில்கொள் நீ அவர்களுக்கு முன்னால் இருக்கிறாய் என்று.
  • உன் மனைவியின் ரசனையில் குறை சொல்லாதே, ஏனெனில் உன்னையும் அவள்தான் தேர்வு செய்தாள்.
  • வாயிலே சோறுள்ளவரைதான் வார்த்தைகள் இனிமையாக இருக்கும்.
  • பேசுபவன் மூடனாயிருந்தாலும் அதனை கேட்பவனாவது அறிவாளியாக இருக்க வேண்டும்.
  • வெட்கம் மனிதனை விட்டு விலகும்போது அவன் மெல்ல மெல்ல விலங்காக மாறுகிறான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!