"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

The golden languages ​​of many languages.

பல சான்றோர்களும் ஆன்றோர்களும் அவதரித்த புண்ணிய பூமி நம் பாரத பூமி.

பல்வேறு மொழிகளையும், கலாச்சாரங்களையும் கொண்ட பாரத பூமியில் குமரியிலிருந்து காஷ்மீர் வரையிலும் சான்றோர்கள் உதிர்த்த பொன்மொழிகள் (golden languages) ஏராளமாக இறைந்து கிடைக்கின்றன.

அவ்வாறான பொன்மொழிகள் பலவற்றை நாம் பல்வேறு பதிவுகளில் பார்த்து வந்துள்ளோம்.

இந்தியாவில் மட்டுமல்லாது உலகின் பல்வேறு பகுதிகளிலும் தோன்றிய அறிஞர்கள் பல்வேறு மொழிகளில் ஏராளமான பொன்மொழிகளை நமக்காக தந்து சென்றுள்ளனர்.

அவ்வாறு உலக அறிஞர்கள் பலரால் முன்மொழியப்பட்ட பொன்மொழிகள் (multilingual proverb) சிலவற்றை இப்பதிவில் பார்க்கலாம்.

  • உனக்கு வரும் துயரம் உன்னுடைய தலையை வேண்டுமானால் நரையாக்கலாம். ஆனால், உன்னுடைய இதயத்தை பலமாக்கும் என்பதனை நினைவில் கொள் – ஜார்ஜ் பெய்ஷி.
  • தரையோடு தரையாக நசுக்கப்பட்டாலும் சத்தியம் மறுபடியும் எழுந்து நிற்கவே செய்யும் – பிரையண்ட்.
  • நீ சொல்லும் எந்த பொய்யும் உன்னுடைய வயோதிகம் வரை வாழ்வதில்லை – ஸோபோகிளீஸ்.
  • அறிவற்ற அச்சம் இடையூறுகளை இரட்டிப்பாக்குகிறது – தாமஸ்புல்லர்.
  • உன்னுடைய வேதனையையும், இழப்பையும் ஆற்றும் திறன் அமைதிக்கு மட்டுமே உண்டு – ரால்ப் ஹோட்சன்.
  • ஒருவனுக்கு அறிவு இருந்தும் ஆற்றல் இல்லையெனில் அவனுடைய வாழ்நாளெல்லாம் வீண் நாளே!. – ஷாம்பர்ட்.
  • உயிருடன் இருக்கும் மனிதனுக்கு கட்டப்படும் கல்லறையின் பெயர்தான் சோம்பல் – ஜெரேமி டெய்லர்.
  • அரிய சாதனைகள் செய்யப்படுவது வலிமையினால் அல்ல. விடாமுயற்சியினால்தான் – ஓவிட்.
  • உன் நேரத்தை வீணான விஷயங்களுக்காக விரையம் செய்யாதே… எனெனில் அவைகள் பட்டை தீட்டப்படாத வைரங்கள் – ரால்ஃப் வல்டோ எமர்சன்.
  • நாம் எப்போதுமே வாழ்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறோம். ஆனால் வாழ்வதில்லை – எமர்சன்.
  • இந்த உலகில் மதம் ஒரு நல்ல கவசம், ஆனால் மோசமான மேலங்கி – புல்லர்.
  • அனைவரும் உலகை மாற்றிவிட முயல்கிறார்கள்… ஆனால் மாறவேண்டியது உண்மையில் நாம்தான் என்பது ஒருபோதும் அவர்களுக்கு தெரிவதில்லை – டால்ஸ்டாய்.
  • எல்லாவற்றையும் மாற்ற நினைப்பவர் உண்மையில் ஒன்றையும் மாற்ற முடியாதவர்களாகவே இருப்பர் – நான்ஸி அஸ்டார்.
  • முரணில்லாதிருக்க முயல். உண்மையாயிருக்க உழை – ஹோம்ஸ்.
  • முதலில் தூசியை கிளப்பி விடுவதும் நாம்தான். அதன்பின் முன்னால் இருப்பதை சரியாக பார்க்க முடியவில்லை என்று குறைபட்டுக் கொள்வதும் நாம்தான் – பிஷப் பார்க்லி.
  • மாற்றத்திற்கு ஏற்ப மாறிக்கொள்வதே சிறந்த செயலாகும் – ஸ்டீபன் ஹாக்கிங்.
  • ஆசைகளுக்கேற்ப வசதிகளைப் பெருக்குவதைவிட, வசதிகளுக்கேற்ப ஆசைகளைக் குறைத்துக்கொள்வது நல்லது – அரிஸ்டாட்டில்.
  • நான் மெதுவாக நடப்பவன்தான், ஆனால் ஒருபோதும் பின்வாங்குவதில்லை – ஆபிரகாம் லிங்கன்.
  • நல்லது போனால் தெரியும், கெட்டது வந்தால்தான் தெரியும் – சாக்ரடீஸ்.
  • உழைப்பவனின் வீட்டிற்குள் பசி எட்டிப்பார்க்குமே தவிர உள்ளே நுழைய துணியாது – பிராங்க்ளின்.
  • பெரிய விஷயங்களைப் போலவே சிறிய விஷயங்களையும் கவனிக்கக்கூடிய மனம் எதுவோ அதுவே உண்மையும் உறுதியும் பொருந்திய மனமாகும் – ஜான்ஸன்.
  • உண்மை மனிதனுக்கு சொந்தம். அவன் செய்யும் பிழைகளோ அவனுடைய காலத்திற்கு சொந்தம் – கதே.
  • அதிகமான ஜனங்கள் நம்புகிறார்களா? அப்படியென்றால் அதில் ஏதோ ஏமாற்று இருக்கிறது என்று பொருள். எனவே சர்வ ஜாக்கிரதையாக ஆராய்ந்த பின்பே முடிவெடு – டால்ஸ்டாய்.
  • தவறு ஒன்றுதான் சர்க்கார் தயவை வேண்டி நிற்கும். சத்தியத்திற்கு அது வேண்டியதில்லை – தாமஸ் ஜெவ்வர்ஸன்.
  • பொய்யானவற்றால் கவரப்படும் மனமானது நல்ல விஷயங்களில் இன்பம் காண்பதில்லை – ஹொரேஸ்.
  • நீ கவலைகளை சுமந்து கண்ணீர் சிந்துவதைவிட, லட்சியங்களை சுமந்து ரத்தம் சிந்துவதே சிறப்பு – லெனின்.
  • தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தடம் பதித்து நடப்பவன் மாமனிதன் – பிடல் காஸ்ட்ரோ.
  • நீ போகும் பாதையில் தடைகள் எதுவும் இல்லை என்றால் அது உன்னுடைய பாதை அல்ல. வேறு யாரோ விட்டுச்சென்ற பாதை – பிடல் காஸ்ட்ரோ.
  • கஷ்டங்கள் மட்டும் இல்லையென்றால் போராடும் எண்ணமே நமக்கு இல்லாமல் போயிருக்கும் – பிடல் காஸ்ட்ரோ.
  • உன்னை அதிகம் விமர்சிப்பவனே உன்னை கண்டு அதிகம் பயப்படுகிறான் – பிடல் காஸ்ட்ரோ.
  • போராடும்வரை வீண் முயற்சி என்பார்கள், வென்ற பின்பு விடாமுயற்சி என்பார்கள் – பிடல் காஸ்ட்ரோ.
  • நீங்கள் என்னை அநியாயமாக தண்டிக்கலாம், தண்டனை வழங்கலாம். ஆனால், அதைப்பற்றியெல்லாம் எனக்கு கவலையில்லை. ஏனெனில், நாளைய வரலாறு எனக்கு நீதி வழங்கும் – பிடல் காஸ்ட்ரோ.
  • கடந்த காலத்திற்கும் எதிர் காலத்திற்கும் இடையேயான போராட்டம்தான் “புரட்சி” – பிடல் காஸ்ட்ரோ.
  • சோம்பல் என்பது இளைப்பாறுதல் அல்ல. அது வேலையைவிட அதிக களைப்பை தருவது – புல்லர்.
  • சுறுசுறுப்புக்கு எல்லாமே எளிது. ஆனால் சோம்பலுக்கோ எல்லாமே கடினம் – ஆரோன்புர்.
  • அறிவின்மையைவிட அதிக கேவலமானது மனமின்மை – ஜேம்ஸ் ஆலன்.
  • தன்னை அதிக புத்திசாலியாக எண்ணுவதே மனிதனிடம் உள்ள மிகப்பெரிய பலவீனம் – சிம்மன்ஸ்.
  • மனிதனை மனிதனாக்குபவை உதவிகளும், வசதிகளுமல்ல. இடையூறுகளும் துன்பங்களுமே – மாத்யூஸ்.
  • நீ வாழ்க்கையில் முன்னேற விரும்பினால் உன்னுடைய கால்களால் நடந்து போ. மற்றவர்களின் முதுகின் மேல் சவாரி செய்ய விரும்பாதே – நீட்சே.
  • ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான் சறுக்கல்களுக்கு காரணமாயிருக்கிறது – சாமுவேல் பட்லர்.
  • எல்லா மனிதர்களையும் நம்புவது ஆபத்து. ஒருவரையும் நம்பாமல் இருப்பது அதைவிட பேராபத்து – ஆபிரஹாம் லிங்கன்.
  • பல கஷ்டங்களையும், நஷ்டங்களையும் கடந்த பின்பே மனிதன் அதிக அடக்கத்தையும் அறிவையும் பெறுகிறான் – பிராங்க்ளின்.
  • பரிந்துரை ஒருவரை அறிமுகம் மட்டுமே செய்யும். தகுதிதான் அவரை நிலைபெறச் செய்யும் – வைரமுத்து.
  • மரியாதைக்கு விலை கிடையாது. ஆனால் அது அநேகரை விலைக்கு வாங்கும் – மாண்டேகு.
  • பணம் சம்பாதிப்பது ஒன்றே வாழ்வின் இலட்சியம் என்றால் அது தவறான வழியிலேதான் தேடப்படும் – ரஸ்கின்.
  • முட்டாள்கள் அரசாளும் நாட்டில் கயவர்களுக்கு பட்டினி என்பதே இல்லை – சர்ச்சில்.
  • புகழை மறந்தாலும், நீ பட்ட அவமானங்களை ஒருபோதும் மறவாதே, அது இன்னொருமுறை நீ அவமானப்படாமல் உன்னை காப்பாற்றும் – அடால்ஃப் கிட்லர்.
  • தங்கள் கால்களால் பறவைகள் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றன என்றால் மனிதனோ தன் நாவினால் சிக்கிக் கொள்கிறான் – தாமஸ் புல்லர்.
  • ஒருபொழுதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உலகில் உண்டென்றால் அது நீ செய்யும் நற்செயல்கள் மட்டுமே – மேட்டர்லிங்க்.
  • விரும்ப வேண்டியவற்றை விரும்பவும், வெறுக்க தகுந்தவற்றை வெறுக்கவும் செய்யுமாறு உன்னை தூண்டுவதே உண்மையில் அறமாகும் – ஸெயின்ட் அகஸ்டைன்.
  • பணத்தின் உண்மையான மதிப்பு பிறரிடம் கடன் கேட்கும் போதுதான் தெரியும் – பிராங்க்ளின்.
  • நீ அறநெறியல் நிற்கும் ஒவ்வொரு சமயத்திலும் உன் வாழ்வில் நன்மை விளையாவிட்டால் அதற்காக சோர்வடையாதே… மாறாக, இனி வரும் துன்பம் ஒன்று வராது தொலைந்திருக்கும் என்று அமைதி கொள் – பென்தம்.
  • நன்மை ஒரு நல்ல வைத்தியன். ஆனால் சில சமயங்களில் தீமை அதைவிட நல்ல வைத்தியனாக செயல்படுவதுண்டு – எமர்ஸன்.
  • பிறருக்கு நீ உதவி செய்வதோடு நிறுத்திவிடாமல் பிறருக்கு உதவி செய்வது எப்படி என்பதையும் கூடவே கற்றுக்கொடு – ஆவ்பரி.
  • நீ செய்த தீய செயல்களுக்காக மனம் திருந்தி தெய்வத்தின் முன் மண்டியிடுவதற்கு பதிலாக அந்த தீய செயல்களால் பாதிக்கப்பட்ட மனிதன் முன் மண்டியிட பழகிக்கொள். அப்போதுதான் உனக்கு விமோசனம் கிட்டும் – ரஸ்கின்.
  • அன்பு சில குறைகளையும், அறிவு சில பிழைகளையும் பொருட்படுத்துவதில்லை. ஆனால், உண்மையோ எந்த அவமானத்தையும் மன்னிப்பதில்லை – ரஸ்கின்.
  • மனிதனுக்கு எத்துணை பைத்தியம் பாருங்கள். அவனால் ஒரு புழுவைக்கூட சிருஷ்டிக்க முடியாது. ஆனால் அவனோ கணக்கில்லாத கடவுள்களை சிருஷ்டித்து வைத்துள்ளான் – மான்டெய்ன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!