அப்துல்கலாம் – தத்துவங்கள்.
தமிழ்நாட்டிலுள்ள இராமேஸ்வரத்தில் பிறந்தவர். மிகச்சிறந்த அறிவியல் ஆய்வாளர். இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தலைசிறந்த விஞ்ஞானி.
இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்திலும் (DRDO), இஸ்ரோ (ISRO) என்று அழைக்கப்படும் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் பணியாற்றியவர். மேலும் இந்தியாவின் 11 வது குடியரசு தலைவராகவும் பதவிவகித்த பண்பாளர்.

இவர் விஞ்ஞானியாக மட்டுமல்ல ஒரு தத்துவ ஞானியாகவும் தன்னுடைய வாழ்க்கையை நடத்தியவர். இந்த பதிவில் அவர் உதிர்த்த உயரிய தத்துவங்களைத்தான் பதிவு செய்ய இருக்கின்றோம்.
அவருடைய தத்துவங்களைப் பார்ப்பதற்கு முன்னால் அவருடைய வாழ்க்கைக் குறிப்புகளை சிறிது பார்த்துவிடலாம்.
வாழ்க்கைக் குறிப்பு.
பெயர் :- ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல்கலாம் – Avul Pakir Jainulabdeen Abdul Kalam.
பிறப்பு :- அக்டோபர் 15. ஆண்டு 1931.
தாயகம் :- இந்தியா – India.
பிறந்த இடம் :- இராமேஸ்வரம், இராமநாதபுரம், தமிழ்நாடு. (Rameswaram, Ramanathapuram, Tamil Nadu)
பெற்றோர்கள் :- ஜைனுலாப்தீன் – ஆஷியம்மா. (Jainulabdeen – Ashiamma)
வாழ்க்கை :- விஞ்ஞானி – Scientist.
இறப்பு :- ஜூலை 27, ஆண்டு 2015.
டாக்டர் அப்துல்கலாம் – பொன்மொழிகள்.

- உனது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்!
- உன்னுடைய முயற்சிகள் தவறலாம், ஆனால் முயற்சிக்க தவறாதே!
- சிக்கல்களை எதிர்கொள்ளும் போதுதான், உன்னுள்ளிருந்து பல திறமைகள் வெளிப்படுகின்றன.
- ஒரு முறை வந்தால் கனவு, இரு முறை வந்தால் ஆசை – ஆனால் அதுவே பல முறை திரும்ப திரும்ப உன்னுள்ளே எழுமானால் அதுவே உயர்ந்த லட்சியம்.
- வெற்றி பெற வேண்டும் என்ற பதற்றம் சிறிதும் இல்லாமல் நிதானமாக முயற்சிப்பதே வெற்றி பெறுவதற்கான சிறந்த வழி.
- உங்களுக்கு வரும் பிரச்சனைகளை வெறுமனே சகித்துக் கொள்ளாமல் அதனை எதிர்கொள்ள துணியுங்கள்.
- துன்பம் வரும் போது கண்களை மூடாதே. ஏனெனில் அது உன்னை கொன்று விடும், கண்களை திறந்து பார். துன்பத்தை நீ எளிதாக வென்று விடலாம்.
- நம் அனைவருக்கும் ஒரே மாதிரி திறமை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அனைவரும் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள ஒரே மாதிரியான வாய்ப்புகள் உள்ளன.
- நம்பிக்கை நிறைந்த ஒருவர் எந்த சூழ்நிலையிலும் எவர் முன்னாலும் ஒருபோதும் மண்டியிடுவதில்லை.

- சிந்திக்க தெரிந்தவனுக்கு ஆலோசனை தேவை இல்லை. துன்பங்களை சந்திக்க தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை.
- உனது இதயத்தில் நேர்மை இருந்தால் உனது நடத்தையில் அழகு இருக்கும். உனது நடத்தையில் அழகு இருந்தால் உனது வீட்டில் அமைதி இருக்கும். உனது வீட்டில் அமைதி இருந்தால் உனது நாட்டிலும் அமைதி இருக்கும். உனது நாட்டில் அமைதி இருந்தால் உலகில் சமாதானம் பிறக்கும்!
- கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவு காணுங்கள், கனவுதான் சிந்தனையாகவும் சிந்தனைதான் சிறந்த செயலாகவும் மாறுகிறது!
- கனவு என்பது தூக்கத்தில் வருவது அல்ல. உன்னை தூங்கவிடாமல் செய்வதே இலட்சிய கனவு.
- உன் கைரேகையை பார்த்து எதிர்காலத்தை தீர்மானிக்காதே, ஏனெனில் கை இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உள்ளது என்பதனை புரிந்து கொள்.
- இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் வரலாற்றின் பக்கங்களில் ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த பக்கத்தை இந்த உலகையே படிக்க வைப்பது உங்கள் கைகளில்தான் உள்ளது.
- வாழ்க்கை என்பது –
ஒரு சந்தர்ப்பம் – நழுவ விடாதீர்கள்.
ஒரு கடமை – நிறைவேற்றுங்கள்.
ஒரு இலட்சியம் – சாதனை புரியுங்கள்.
ஒரு சோகம் – தாங்கிக் கொள்ளுங்கள்.
ஒரு போராட்டம் – வென்று காட்டுங்கள்.
ஒரு பயணம் – வெற்றியாக நடத்தி முடியுங்கள்.
- உங்களுக்கு தெரியாததை தெரியாது என்று தைரியமாக ஒப்புக்கொள்ளுங்கள். ஆனால், அதே வேளையில் தெரியாததை தெரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்.

- உன்னை உலகம் அறிவதை விட – நீ முதலில் உன்னை உலகிற்கு அறிமுகம் செய்து கொள்.
- ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகின்றான். ஒரு புத்திசாலி தன்னை மிகப்பெரிய புத்திசாலி என்று கர்வம் கொள்ளும் தருணம் முட்டாளாகின்றான்.
- வாய்ப்புக்காக காத்திராதே, வாய்ப்புகளை நீயாகவே ஏற்படுத்திக்கொள்.