Delicious Tamil proverbs

காலம் காலமாக நம் முன்னோர்களின் வாழ்வியல் அனுபவங்களிலிருந்து பெறப்பட்ட அனுபவ சித்தாந்தமே “பொன்மொழிகள்” என்றும் “பழமொழிகள்” என்றும் காலம் காலமாக அழைக்கப்பட்டு வருகின்றன.

வாழ்வியல் நெறிமுறைகளை கற்றுத்தரும் இப்பழமொழிகளில் சில புன்னகையை ததும்ப செய்யுமளவிற்கு நகைச்சுவை மிகுந்தவை.

வாருங்கள் சுவைமிகுந்த பழமொழிகள் சிலவற்றை இப்பதிவில் காணலாம்.

  • மங்கம்மா காலத்து பேச்சு, எங்கம்மா காலத்தில் போச்சு.
  • செத்தால் தெரியும் செட்டியார் வாழ்வு.
  • சென்னி மலை, சிவன் மலை சேர்ந்ததொரு பழனி மலை.
  • சொக்கர் உடைமை அக்கரை ஏறாது.
  • சொட்டையிலே உள்ள சீலம் சுடலை வரை வரும்.
  • சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
  • சொல்லப்போனால் பொல்லாப்பு, சொறியப்போனால் அரையாப்பு.
  • வயிறார தின்று வழிமாண்டு போச்சு.
  • வெட்டிக்கு பிறந்த பிள்ளை வேலியிலே.
  • மூக்குத்தூள் போடாத முண்டத்துக்கு எதுக்கு முப்பது பணத்தில் வெள்ளி டப்பியாம்?
  • காணாது கண்ட கம்பங்கூழை சிந்தாது குடியடா சில்லி மூக்கா.
  • அக்குணிச் சிறுக்கிக்கு முக்கலக் கந்தை.
  • ஆத்தூர் அரிசியும், வேற்றூர் வரகும் இருந்தால் சாத்தூர் சவுக்கியமாம்.
  • திரும்ப திரும்ப சொன்னால் சமுத்திரமும் மூத்திரமாகிவிடும்.
  • எண்ணெய் காணாத மயிரும் பாழ், தண்ணீர் காணாத பயிரும் பாழ்.
  • எந்தத் தலைமுறையிலோ ஒரு நாத்தனாராம், அவள் கந்தல் முறத்தை எடுத்து சாத்தினாளாம்.
  • எருமணம் இல்லாத பயிரும் நறுமணம் இல்லாத மலரும் வீணே.
  • வெறும் குண்டி அம்மணம், போட்டுக்கொண்டால் சம்மணம்.
  • வெறுங்கை தட்டான் இரும்பு ஊதிச் செத்தான்.
  • வேகாத சோற்றுக்கு விருந்தாளி இரண்டு பேர்.
  • அட்சதைக்கு வழியில்லை இலட்சம் பேருக்கு சாப்பாடாம்.
  • காசை பார்த்தால் ஆசையாக இருக்கிறது, கண்ணைப் பார்த்தால் போதையாக இருக்கிறது.
  • செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
  • செத்த பிணத்துக்கு கண்கள் ஏனோ? சிவ சிவ ஆண்டிக்கு பெண்கள் ஏனோ?
  • அத்தான் செத்தால் மயிராச்சு, கம்பளி மெத்தை நமக்காச்சு.
  • மூதேவிக்கு முகூர்த்தம் வைத்தால் முப்பது நாழிகையும் ராகுகாலம்தான்.
  • போசனம் கொஞ்சம் ஆனாலும் ஆசனம் மட்டும் ரொம்ப பெருசு.
  • அங்காடிக்காரியை சங்கீதம் பாட சொன்னால், வெங்காயமே பெருங்காயமே வாங்கலியோ வருங்காலமே என்றுதான் பாடுவாள்.
  • போவதும் வருவதும் மோட்டார் வண்டி, பொங்கித் தின்பது புதுமண் சட்டி.
  • அப்பச்சி இங்கு கதம்பையை சூப்ப, பிள்ளை அங்கு தேங்காய்க்கு அழுகிறது.
  • உன் உத்தமி தங்கை ஊர்மேய போனதால் என் பத்தினிப் பானை படபட என்கிறது.
  • ஊசி குத்தின இடத்தில் உரல் விழுந்த கதை.
  • ஊர் வழி போனவளுக்கு தோள் மேலே கொண்டையாம், ஏன் என்று கேட்கப்போக லடாபுடா சண்டையாம்.
  • ஊரை விட்டு போனானாம், தாரை விட்டு அழுதானாம்.
  • ஊரை கண்டவுடனே உடுக்கை தோளில் ஏறிக்கொள்ளுமாம்.
  • ஊறாக் கிணறும், உறங்காப்புளியும், தீரா வழக்கும் திருக்கண்ணங்குடி வழக்கே.
  • எடுக்க போன சீமாட்டி இடுப்பு ஒடிந்து விழுந்தாளாம்.
  • எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும், இறந்தாலும் சிங்காரக் கழுவில் இறக்க வேண்டும்.
  • அஞ்சும் மூன்றும் எட்டு அத்தை மகளை கட்டு.
  • அப்பத்தில் நெய்மிகுந்து தெப்பத்தில் மிதக்கிறது.
  • மூலையிலே சுந்தரம், ஓதுகிறானடி மந்திரம்.
  • சட்டி மூளியானாலும் கொளுக்கட்டை வெந்தால் போதும்.
  • மூன்று பல்லும் போனவனுக்கு முறுக்கு கடையில் என்ன வேலை?
  • அம்பா பாக்கியம் சம்பா விளைந்தது, பாவி பாக்கியம் பதராக போனது.
  • உண்ட வீட்டில் உட்காராமல் போனால் கண்டவர்கள் எல்லாம் கடுகடு என்பார்கள்.
  • உதவாத பழங்கலமே, ஓசை இல்லா வெண்கலமே.
  • உயிருக்கு வந்தது மயிரோடு போயிற்று.
  • உழக்கு உள்ளூருக்கு, பதக்கு பரதேசிக்கு.
  • உள்ள பிள்ளை உரலை நக்க, மற்றொரு பிள்ளையோ மறுதேசம் சென்றானாம்.
  • உறவிலே போகிறதைவிட ஒரு கட்டு விறகிலே போகலாம்.
  • உறவு முறையான் மூத்திரத்தை விழுங்கவும் முடியாது, உமிழவும் முடியாது.
  • உறை மோருக்கு வழி இல்லாதவன் வீட்டில் விலை மோருக்கு போனானாம்.
  • மெத்தை நேர்த்தி தலையணை மட்டுமே பீத்தல்.
  • அரகரா சிவசிவா மகாதேவா, ஆறேழு சுண்டலுக்கு அரோகரா.
  • மேட்டு நிலத்தை உழுதவனும் கெட்டான். மேனா மினுக்கியை கொண்டவனும் கெட்டான்.
  • மேம்போக்காக உழுவாரே கூழுக்கு அழுவார்.
  • மேளக்காரனுக்கு ஏற்ற மத்தளக் கட்டை, வேலைக்காரனுக்கு ஏற்ற சந்தனக் கட்டை.
  • மைனர் ஜாலி… மணிபர்ஸோ காலி.
  • அமாவாசை இருட்டு, சோற்றுபானையை போட்டு உருட்டு.
  • வார்த்தையை தூக்கி எறிவானேன்? பின்பு தலையை தலையை சொறிவானேன்?
  • ஆத்துக்கு மிஞ்சி அரோகரா போட்டாலும் சோத்துக்கு மிஞ்சின தெய்வமே இல்லை.
  • ஆற்றுக்குள்ளே இறங்கி அரோகரா போட்டாலும் சோற்றுக்குள்ளேதான் இருக்கிறானாம் சொக்கலிங்கம்.
  • ஆற்றைக் கெடுக்குமாம் நாணல், ஊரைக் கெடுக்குமாம் பூணூல்.
  • இளகின இரும்பை கண்டால் கொல்லன் குண்டியை தூக்கி அடிப்பானாம்.
  • உச்சந்தலையில் முள் தைத்து உள்ளங்காலில் புரை ஓடிற்றாம்.
  • தாரம் இரண்டும் தனக்கு பகை.
  • உடைந்த சட்டி உலைக்கு உதவா.
  • உடுக்கு அடிக்கிறவனுக்கு நடுக்கக் கை.
  • உடையார் உண்டைக் கட்டிக்கு அழ, பஞ்சலிங்கம் பஞ்சாமிர்தத்திற்கு அழுததாம்.
  • ராம பாணமே பாணமாம். அது எங்கே போச்சுதோ காணோமாம்.
  • அரங்கனை பாடிய வாயால் குரங்கனைப் பாடுவேனோ?
  • வட்டியும் முதலும் கூடி வந்தால் செட்டியார்கூட சிரியாய் சிரிப்பார்.
  • வடையை தின்ன சொன்னார்களா? துளையை எண்ண சொன்னார்களா?
  • ஏப்பம் பரிபூரணம் சாப்பாடுதான் பூஜ்யம்.
  • ராஜாவே அங்கு கடன்பட்டு கிடக்க புழுக்கைக்கு இங்கே புழுங்கலரிசி சாதம் கேட்குதாம்.
  • அரித்தவன் சொறிந்துகொள்வான். கரித்தவன் கடிந்து கொள்வான்.
  • வற்றி இருக்கும் ஏரியை கண்டால் வளைய வளைய நீந்துவேன் என்றானாம்.
  • அரிவாள் ஆடும் மட்டும் குடுவையும் ஆடும்.
  • வறட்டு ஜம்பத்துக்கு குறட்டைவிட்டு காட்டினானாம்.
  • வாத்தியார் பெண்டாட்டிக்கு வாடல் வெற்றிலை.
  • வாங்கி தின்னுமாம் வயிறு. விண்ணாரம் பேசுமாம் உதடு.
  • விடிய விடிய இறைக்க, விடிந்த பிறகு உடைக்க.
  • விடியாமல் உலைவைத்து வடியாமல் விடுவேனோ?
  • வித்துவான் அருமையை விறகு தலையன் அறிவானா?
  • வீட்டு தெய்வத்தை விளக்குமாற்றால் அடித்துவிட்டு காட்டு தெய்வத்தைக் கையெடுத்து கும்பிட்டாளாம்.
  • வீட்டையும் மெழுகி வைத்து, வெறும் குழம்பையும் ஆக்கி வைத்து, கல்லடி சோற்றுக்காக கலங்கி நின்றேனே அரங்க நாதா!
  • வீடு விழுந்தது விறகுக்கு ஆச்சு.
  • வீண் இழவாம், வெங்காயத் தோலாம், பிடுங்கப் பிடுங்க பேரிழவாம்.
  • வீண் இழவுக்கு வீட்டைக் கட்டி பார இழவுக்கு பந்தல் போட்டானாம்.
  • அரைக்கிற அரிசியை விட்டுவிட்டு சிரிக்கிற சிற்றப்பனோடு சிறுக்கிக்கு என்ன வேலை?
  • வீராணம் ஏரி விழுந்து விழுந்து விளைந்தாலும் பெருமாள் கோவில் பொரிமாவுக்குதானும் காணாதாம்.
  • அரைத்ததும் மீந்தது அம்மி, சிரைத்ததும் மீந்தது குடுமி.
  • வெந்த மூஞ்சியை (சிடு மூஞ்சி) விளக்கில் காட்டினாளாம், வந்த விருந்தெல்லாம் ஓடியே போச்சுதாம்.
  • அடி செருப்பாலே ஆற்றுக்கு அப்பாலே.
  • அடித்த இடத்தை கண்டறிந்து பிடித்து அழவே ஆறுமாதம் ஆச்சுதாம்
  • அண்ணாமலையார் அருள் இருந்தால் மன்னார்சாமி மயிர் பிடுங்குமா?
  • அடிபோன சட்டி ஆயா வீட்டில் இருந்தால் என்ன? ஆண்டாள் வீட்டில் இருந்தால் என்ன?
  • அடுத்தவன் தலையில் நரை என்பானேன். அவன் அதனை வந்து சிரை என்பானேன்?
  • அடை தட்டின வீடு தொடை தட்டும்.
  • அண்டை வீட்டு கல்யாணமே, ஏன் அழுகிறாய் என் கோவணமே?
  • மொட்டையும் மொட்டையும் சேர்ந்து முருங்கை மரத்துல ஏறிச்சாம்.
  • வெண்கலம் நடமாட குயவன் குடிபோக.
  • கற்றவர் காய்வது காமனையே, உற்றவர் போற்றுவது ராமனையே!
  • அடங்காப்பெண்ணை கொண்டவனும் கெட்டான், அறுகங்காட்டை உழுதவனும் கெட்டான்.
  • அடித்து வளர்க்காத பிள்ளையும், முறுக்கி வளர்க்காத மீசையும் வாய்க்கு முன்னே ஏய்க்கும்.
  • அவளை தொடுவானேன்? கவலை படுவானேன்.
  • அழுக்கை துடைத்து மடியில் வைத்தாலும் புழுக்கை குணம் மட்டும் போகவே போகாது.
  • அழுகின பழம் ஐயருக்கு. நழுவின பழம் நாதருக்கு.
  • அற்பத்திற்கு அரைக்காசு அகப்பட்டாலும் திருக்குளத்தில் போட்டு தேடி எடுக்குமாம்.
  • அன்னப்பாலுக்கு சிங்கி அடித்தவன்தான் ஆவின் பாலுக்கு சர்க்கரை கேட்கின்றான்.
  • கண்டதைத் தின்பவன் குண்டனாவான்.
  • எடாத எடுப்பு (அளவுக்கதிகமான உணவு) எடுத்தால் படாத பாடு படுவாய்.
  • ஆகிற காலத்திலெல்லாம் அவிசாரி ஆடி, சாகிற காலத்தில் சங்கரா என்றாளாம்.
  • ஆட்சி திரளவும், அய்யா உருளவும் சரியாக இருக்கும்.
  • ஆச்சி நூற்கிற நூல்… ஐயர் பூணூலுக்கே சரியாய் போச்சு.
  • ஆசாரப் பூசைப்பெட்டி, அதன்மேலே கவிச்சுச் சட்டி.
  • ஆண்டி கிடக்கிறான் அறையிலே அவன் சடை கிடக்குது தெருவிலே.
  • ஆண்டி பெற்ற அஞ்சுமே அவலம்.
  • ஆண்டியை அடிக்க, அவனோ குடுவையை போட்டு உடைக்க.
  • ஆயிரம் பட்டும் அவம் ஆச்சு. கோயிலைக் கட்டியும் குறை ஆச்சு.
  • ஆருக்குப் பிறந்து மோருக்கு அழுகிறாய்?
  • ஆவணி மாதம் தாவணி போட்டவள் புரட்டாசி மாதமே புருஷன் வீடு போனாளாம்.
  • ஆவது அஞ்சிலே தெரியும், காய்ப்பது பிஞ்சிலே தெரியும்.
  • ஆழ உழுது அரும்பாடு பட்டாலும் பூமி விளைவதென்னவோ புண்ணியவான்களுக்கே!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!