"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Mother Teresa Philosophy

இந்த உலகில் கருணை உள்ளத்தோடு கடைசிவரை வாழ்ந்தவர் அன்னை தெரேசா. தாய்மை உள்ளத்தோடு அனைவரையும் நேசித்ததால் “அன்னை” என்று அன்போடு அனைவராலும் அழைக்கப்பட்டவர்.

அன்பு கலந்த அன்னை தெரசாவின் (Mother Teresa) தத்துவார்த்த மொழிகளையே நாம் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பார்க்கலாம்.

பெயர் :- தெரசா – Teresa.

இயற்பெயர் :- ஆக்னஸ் கோன்ஜா போஜாஜியூ – Agnes Gonxha Bojaxhin.

செல்லப் பெயர் :- கோன்சா.

பிறப்பு :- 1910. ஆகஸ்ட் 26.

பிறந்த இடம் :- மசிடோனியா – ஸ்கோப்ஜி நகரம். (Macedonia – Skopje City)

தாயகம் :- அல்பேனியா – Albania.

தந்தை :- நிகோலா பொஜாஜியூ – Nikola Bojaxhin.

தாய் :- திரானி பெர்னாய் – Drane Bernai .

உடன் பிறப்பு :- அக்கா ( Aga ) மற்றும் அண்ணன் ( Lasar ). 

வாழ்க்கை :- ஆன்மீகம், ஏழைகளுக்கு தொண்டாற்றுதல்.

இறப்பு :- 1997, செப்டம்பர் 5.

இறந்த இடம் :- கொல்கத்தா – Kolkata.

  • அமைதிக்கான நோபல் பரிசு – Nobel Prize (1979).
  • பாரத ரத்னா விருது – Bharat Ratna award (1980).
  • Golden Honour of the nation (1994).
  • சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கம் (1985).
  • பத்ம ஸ்ரீ – Padma Shri Award (1062).
  • டெம்பிள்டன் பரிசு (1973).
  • Congressional Gold Medal (1997).
  • சர்வதேச புரிந்துணர்வுக்கான ஜவகர்லால் நேரு விருது (1969).
  • Pope John XXIII Peace Prize (1971).
  • Order of Merit (1983).
  • Pacem in Terris Award (1976).
  • Albert Schweilzer International Prize (1975).
  • Ramon Magsaysay Award for Peace and International Understanding (1962).
  • Grand Order of Queen Jelena (1995).
  • Patronal Medal (1979).
  • Balzan Prize for humanity , Peace and Fratemity Among Peoples (1978). மற்றும் Order of the Smile.
  • அன்புதான் உன் பலவீனம் என்றால். இந்த உலகில் மிகச் சிறந்த பலசாலி நீதான்.
  • பிறருக்கு உதவும் கரங்கள், ஜெபிக்கும் உதடுகளை விட சிறந்தது.
  • வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல. பிறர் மனதில் நீ வாழும் வரை தொடரும்.
  • உனக்காக வாழ்கிறேன் என்று பிறர் சொல்வதை விட , உன்னால் நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன் என்று ஒருவர் சொன்னால் அதுவே சிறந்த வாழ்க்கை. !!!
  • உங்களை வெறுப்பவர் யாராக வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால் அவர்களையும் நேசிப்பவராக நீங்கள் இருங்கள்.
  • குற்றம் காணத் தொடங்கினால் அன்பு செய்ய நேரம் இருக்காது.
  • நீங்கள் வாசம் செய்யும் இடத்தில் அன்பு பெருக வேண்டுமா? அனைவரிடமும் மனம்விட்டு பேசுங்கள் இதுவே ஒரே வழி.
  • நீ கருவுற்றால் ஓரு சில குழந்தைகளுக்கு வேண்டுமானால் தாயாகலாம். ஆனால் நீ கருணையுற்றாலோ ஓராயிரம் குழந்தைகளுக்கு தாயாகலாம்.
  • அனைவரும் இறுதியில் ஒருநாள் இறக்கத்தான் போகிறோம் . ஆனால் அது வரையில் இரக்கத்தோடு வாழ்ந்துவிட்டு செல்வோம்.
  • கொடுப்பது சிறியது என்று தயங்காதே, பெறுபவர்க்கு அதுபெரியது. எடுப்பது சிறியது என்று திருடாதே, இழந்தவருக்கு அது பெரியது.
  • நோய்களிலே மிகக் கொடிய நோய், பிறர் மீது அக்கறை இல்லாமல் இருப்பதே.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!