"சாதி"தான் இங்கு சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும்... If caste is deemed to be society, let poison spread in the air...

Innovative Proverbs

நம் முன்னோர்கள் தங்கள் வாழ்வின் மூலம் பெற்ற அனுபவங்களை வார்த்தைகளில் செதுக்கி வைத்து சென்றுள்ளனர். இவர்களின் பண்பட்ட முதுமொழியையே பழமொழி (Proverbs) என அழைக்கிறோம். இது புண்பட்ட மனதை பண்படுத்தும் திறன் வாய்ந்தது எனலாம். மனதை பண்படுத்தும் சில பழமொழிகளை புதுமையான பழமொழிகள் (Innovative Proverbs) என்னும் இப்பதிவில் பார்க்கலாம்.

  • உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
  • சிறு துரும்பும் பல் குத்த உதவும்.
  • மவுனம் கலக நாசம்.
  • மவுனம் மலையையும் சாய்க்கும்.
  • உடல் உள்ளவரை கடல் கொள்ளா கவலை.
  • சைகை அறியாதவன் சற்றும் அறியான்.
  • கணக்குப் பார்த்தால் பிணக்கு வரும்.
  • கடிந்த சொல்லினும் கனிந்த சொல்லே பெருமை.
  • நித்தமும் ஆனால் முத்தமும் சலிக்கும்.
  • கொடுங்கோல் அரசு நெடுங்காலம் நில்லாது.
  • மலையை துளைக்குமாம் சிற்றுளி.
  • கொடுத்தது கேட்டால் அடுத்தது பகை.
  • தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்.
  • சுயபுத்தி இல்லையென்றாலும் சொல்புத்தி வேண்டாமா?
  • இறைக்க ஊறும் மணற்கேணி. ஈயப் பெருகும் பெருஞ்செல்வம்.
  • பொறுத்தார் பூமி ஆள்வார். பொங்கினார் காடாள்வார்.
  • ஒருமைப்பாடில்லாத குடி ஒருமித்துக்கெடும்.
  • உன் நாக்கிலே இருக்கிறது நன்மையும், தீமையும்.
  • எண் இல்லாதவன் கண் இல்லாதவன். எழுத்து இல்லாதவன் கழுத்து இல்லாதவன்.
  • கூலியை குறைத்து வேலையை கெடுக்காதே.
  • நடந்து கொண்டிருந்தால் ஊரெல்லாம் உறவு. படுத்துக்கொண்டால் பாய்கூட பகை.
  • கண்டதைச் சொன்னால் கொண்டிடும் பகை.
  • எண்ணி செயல்படுபவன் கெட்டி, எண்ணாமல் செயல்படுபவன் மட்டி.
  • புத்தி கெட்ட ராசாவுக்கு மதிகெட்டவன்தான் மந்திரி.
  • பெருமையும் சிறுமையும் நாவால் வரும்.
  • கைவிட்டு போனதை நினைத்து வருந்துபவன் புத்தி கெட்டவன்.
  • உண்ணீர் உண்ணீரென்று ஊட்டாதார் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
  • அற முறுக்கினால் அற்றுதான் போகும்.
  • இமை குற்றம் கண்ணுக்கு தெரியாது.
  • குணம் பெரிதேயன்றி குலம் பெரிதன்று.
  • அறிந்தறிந்து செய்கிற பாவத்தை அழுதழுது தீர்க்க வேண்டும்.
  • எட்டி மரம் பழுத்தென்ன ஈயாதார் வாழ்ந்தென்ன.
  • கடுங்காற்று மழை கூட்டும் கடும் சிநேகம் பகை கூட்டும்.
  • குருமொழி மறந்தோன் திருவழிந்து போவான்.
  • குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
  • ஊருடன் பகை வேருடன் கெடும்.
  • கணக்கன் கணக்கறிவான், ஆனால் தன் கணக்கை தானறியான்.
  • சாகிறவரைக்கும் சங்கடம் என்றால் வாழுகிறது எப்போ?
  • பழுத்த ஓலையை பார்த்து குருத்தோலை சிரிக்குதாம்.
  • எமனுக்கு நாலுப்பிள்ளை கொடுத்தாலும் கொடுப்பான் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான்.
  • மொழி தப்பினவன் வழி தப்பினவாவான்.
  • கண் குருடு ஆனாலும் நித்திரைதான் குறையுமா?
  • அழுதாலும் பிள்ளை அவள்தானே பெறவேண்டும்.
  • குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே.
  • கல்லாதார் செல்வத்திலும் கற்றவர் வறுமை சிறப்பு.
  • உண்ணாத சொத்து மண்ணாகப் போகும்.
  • தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கத்தான் செய்யும். 
  • பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை, மெய் சொல்லி தாழ்ந்தவனுமில்லை.
  • உள்ளம் தீயெரிய உதடோ பழம் சொரிய….
  • செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை காலத்திற்கு வரும்?
  • துணை போனாலும் பிணை போகாதே.
  • கோணி கோடி கொடுப்பதைக் காட்டிலும் கோணாமல் காணி கொடுப்பது சிறப்பு .
  • ஒருவனாய் பிறந்தால் தனிமை. இருவராய் பிறந்தால் பகைமை. 
  • கொற்றவன் தன்னிலும் கற்றவன் மேலோன்.
  • துலக்காத ஆயுதம் துருபிடிக்கும்.
  • கருமத்தை முடிக்கிறவன் கட்டத்தை பாரான்.
  • வஞ்சகம் வாழ்வை கெடுக்கும்.
  • இரக்கப் போனாலும் சிறக்கப் போ.
  • எழுதாக் கடனுக்கு அழுதால் தீருமா ?
  • வட்டி வாங்கும் ஆசை முதலுக்கே கேடு.
  • கர்மத்தினால் வந்தது தர்மத்தினால் தொலைய வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »
error: Content is protected !!